சனி, ஆகஸ்ட் 26, 2006
புதன், ஆகஸ்ட் 23, 2006
திங்கள், ஆகஸ்ட் 21, 2006
முதல் ஆறு

ஆறு விஷயங்களை பகிர்ந்து கொள்ள பாலபாரதி அழைத்திருந்தார். எனக்கு பிடித்தவை என்றால் அது நிச்சயமாக ஆறிலே அடங்காது குறைந்தது ஒரு அறுபதாவது தேறும். அதனால சன் டிவி டாப் டென் மாதிரி டாப் ஆறு விஷயங்களை சொல்லி உங்கள அறுக்க போகிறேன் ரெடியா!!!!
என்னை கவர்ந்த ஆறு சினிமா பாடல் வரிகள்
1.சங்கமம் படத்தில் மழைத்துளி பாட்டில் வரும்
"விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு"
2.பயணங்கள் முடிவதில்லை இளைய நிலா பாடல்
"முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ"
3.திருடா திருடா படத்தில் வரும்
"புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்"
4.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் பாரதியின் வரிகள்
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ"
5.கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் வரும்
"கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே"
முழுப் பாட்டும் பிடிக்கும்
6.மூன்றாம் பிறை படத்தில் வரும்
"கண்ணே கலை மானே "
இது என் மனதில் தோன்ற்ய முதல் ஆறு பாடல் வரிகள்.
மனம் குதூகலிக்க வைக்கும் ஆறு
1.அலைகள் கால்களை வருட,காற்று மென்மையாய் வீச..கடற்கரையில் ஒரு மாலை
2.ஜன்னலோரம் அமர்ந்து உறவினர்களுடனும் நண்பர்களுடனுமான தொலைதூரப் பயணம்
3.மழலைகளுடன் மழையில் விளையாட்டு
4.வெளியே மெலிதாய் மழை பெய்ய ஒரு கையில் புத்தகமும் இளையராஜா இசையும் இன்னொரு கையில் அடம் பிடித்து அம்மா கையால் போட்ட காபி
5.தெரியாத ஒருவருக்கு சின்னதாய் உதவி செய்யும்போது மலரும் அவர்களின் முகம் காணும்போது
6.என்னவருடன் 2 வீலரில் வேகமாய் செல்லும்போது...
கற்றுக்கொள்ள விரும்பும் ஆறு
1.வீணை வாசிக்க :- இது வரை ஆறு முறை வீணை கத்துக்க முயற்சித்தேன். முதல் முறை ஆசிரியை வீடு மாற்றி சென்றுவிட்டார்கள் இரண்டாவது முறை நாங்கள் வீடு மாற்றி சென்றோம், மூன்றாவது முறை வகுப்பையே நிறுத்தி விட்டார்கள்,நாலாவது முறை நான் சிங்கப்பூர் வந்துவிட்டேன், அடுத்த முறை இங்கு ஒருவரிடம் சென்றால் அவருக்கு இந்தியா மாற்றம்,ஆறாவது முறை இப்போது புது வகுப்பு ஆரம்பித்திருக்கிறார்கள் போய் விசாரிக்க வேண்டும்
2.பரத நாட்டியம் :- இல்லை இல்லை இதுக்கு வீணை மாதிரி வரலாறு எல்லாம் இல்லை. ஒரு போது கற்று கொண்டிருந்தேன் ஆனால் பாதியில் நிறுத்தி விட்டேன்
3.தமிழிலும் அங்கிலத்திலும் ஒழுங்காய் எழுத :- நானும் எழுதுகிறேன் பேர்வழி என்று கிறுக்கி கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒழுங்கான அழகான படைப்புக்கள் எழுத ஆசை.
4.ட்ரம்ஸ் ட்ரம்ஸ் :- சமீபத்தில் சிவமணியின் நிகழ்ச்சி பார்த்ததில் இருந்து ட்ரம்ஸ் கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.நீ சமையல் அறையில் இருந்தாலே ட்ரம்ஸ் வாசிப்பது மாதிரிதான் என என் கணவர் சொல்வது வேறு விஷயம்.
5.சமைக்க - இல்லிங்க நா கொஞ்சம் சுமாரா சமைப்பேன். இருந்தாலும் இன்னுமே நல்லா சமைக்க கத்துகிட்டு நல்ல பேர் வாங்கணும்னு ஆசை
6.டென்னிஸ் - எல்லாம் சானியா மிர்ஸாவ பாத்தததுலேந்து இதுவும் ஒரு ஆசை.இதுல வேற என் கணவருக்கு நல்லாவே ஆடத்தெரியுமா அதனால இப்ப அவருதான் என் கோச்.
எனக்கு பிடித்த பொழுது போக்கு ஆறு
1.அரட்டை - வயது வரம்பை பார்க்காமல் அனைவருடனும் வெட்டியாக அரட்டை அடிப்பதில் உள்ள சுகமே தனி. அதுவும் அது வெட்டியான விஷயமாக இருப்பது is a must
2.சண்டை - என் தங்கையுடன் சண்டை போடுவது என்றால் அது அல்வா சாப்பிடுற மாதிரி அவ்வளவு பிடிக்கும்.
3.ஊர் சுத்துதல் - நன்பர்களுடனும் ,உறவுகளுடனும் ஊர் சுற்றுவது ஜாலீ
4.படிப்பது - இப்பதான் உருப்படியா ஒண்ணு சொல்லி இருக்கேன்னு சொல்றிங்கதானே.
5.இசை - நா பாடினாலும்? பிடிக்கும் மத்தவங்க பாடுறத கேக்கவும் பிடிக்கும் எப்பவும் ஏதாவது ஒரு பாட்டு ஒடிகிட்டே தான் இருக்கும்
6.கிறுக்கல் - இதோ இப்ப எழுதிட்டு இருக்கேனே இந்த வேலையும் ரொம்ம்ம்ப பிடிக்கும் (மத்தவங்களுக்குதானே கஷ்டம்)
ஆறு உணர்ச்சிகள்
1.கோபம் - வயசானவங்கள கஷ்டபடுத்தர யாரைப் பார்த்தாலும் கோவம் பொத்துகிட்டு வரும்
2.சந்தோஷம் - நா சின்ன சின்ன விஷயத்துக்கே ரொம்ப சந்தோஷப்படுவேங்க.இருந்தாலும் இப்ப சமீபத்துல ரொம்ப சந்தோஷப்பட்டது குங்குமம் இதழ்ல கவிதைய பாத்தபோது. கெளதமுக்கு தாங்க்ஸ்
3.வருத்தம் - அப்பா அம்மா தங்கை மாமியார் மாமனார் இவங்கள விட்டுட்டு தூரமா இருக்கோமேன்னு வருத்தம்
4.வெறுப்பு - அய்யோ ஊர்வன எதை பாத்தாலும் நமக்கு வெறுப்புதாங்க
5.சிரிப்பு - இத கேட்டா புரியும் http://raasukutti.blogspot.com/2006/08/blog-post_23.html
6.ஆச்சரியம் - என்னை ஆறு விஷயங்களை சொல்ல பாலா அழைச்சது
அழைக்க விரும்பும் ஆறு பேர்
ஆறு பேருக்கு ஈடான நம் கோகோ

உதவும் கரங்கள்

சமீபத்தில் எங்கள் நிச்சயதார்த்த anniversary ? வந்தது.
ஏதாவது ஒரு காரணத்த கண்டுபிடிச்சி கொண்டாடரதுல,
என் கணவரும் நானும் நல்லாவே போட்டி போட்டுக்குவோம். அந்த நாள கொண்டாட
ஒருத்தருக்கு ஒருத்தர் பரிசு குடுத்து கலாட்டாவா இருக்கும்.
இந்த முறை என்னவருக்கு என்ன வாங்கலாம்னு யோசிச்சி கடைசில வழக்கம் போல ஒரு
சட்டையும் கார்டும் வாங்கி குடுத்தேன்.அவரும் அத வாங்கிட்டு தேங்ஸ்னு சிரிச்சிட்டு போயிட்டார்.
எனக்கு என்ன வாங்கினீங்கனு நா கேட்டதும் நானே உனக்கு பரிசுதானே ஒரு டயலாக் வேற
சரீன்னு ஆபிஸ் கிளம்பி வந்துட்டேன்.
சரியா லஞ்சு டைம்ல உதவும் கரங்கள் வித்யாகர் கிட்டேந்து ஃபோன்
உங்களுக்கு anniversary வாழ்துக்கள் நீங்க சொன்னபடி 100 குழந்தைகளுக்கு இன்னிக்கு வடை பாயசத்தோட சப்பாடுன்னு சொன்னதும் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல.
எல்லாமே புரிஞ்ச சிரிப்போட என் கணவர்..
எப்படி இருக்கு என் பரிசுன்னு சொன்னதும் வார்த்தை இல்லை என் சந்தோஷத்தை விவரிக்க
என் கணவர் எனக்கு தந்த அற்புதமான பரிசு அதுதான்.
Check it out.
http://www.udavumkarangal.org/surprise.htm
ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2006
திங்கள், ஆகஸ்ட் 14, 2006
பயணம்

அமைதியான நீரோடை
அங்கே ஓர் இசையாய் கொட்டும் அருவி
வழி காட்டி பறந்து செல்லும் ஜோடிப் பறவைகள்
சுற்றிலும் பச்சை பசேலென இயற்கை வளம்
சில்லென்று காற்று என்னோடு காதல் மொழி பேச
என்னை வரவேற்க ஒரு வானவில் காத்திருக்க
இப்படி இனிதாய் நான் ஓடத்தில் தினமும் பயணம் செய்ய
சீக்கிரம் எழுந்திருடி 8:30 மணி பஸ் போயிடும்
என் கனவுப் பயணத்தை கலைத்த அம்மா
தயாரானேன் நான் நிதர்சனமான நெருக்கடி பேருந்து பயணத்துக்கு
ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2006
உறவுகள் சுகம்

களைத்து போய் கண் மூடும் வேளையில்
அம்மாவின் அரவணைப்பு சுகம்
இரவு 12 மணிக்கு ஜுரம் வந்தால்
ஒடி போய் மருந்து வாங்கி வரும் அப்பாவின் பாதுகாப்பு சுகம்
இருட்டரதுக்குள்ள வீடு வந்து சேரு
கவலையில் சொல்லும் பாட்டியின் அக்கறை சுகம்
என் பேத்தி என்றும் புதுமை பெண்
என வசனம் பேசும் தாத்தாவின் பேரன்பு சுகம்
சண்டை போடவே பிறந்தாளோ என சந்தேகம் வந்தாலும்
என் வெற்றி கண்டு பூரிப்படையும் என் தங்கையின் பாசம் சுகம்
தன் சேமிப்பை கரைத்து ராக்கி அன்று
என் கையில் பரிசை தரும் அண்ணனின் ஆதரவு சுகம்
என் சந்தோஷம் மட்டுமல்ல துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும்
தோழிகளுடனான உரையாடல் சுகம்
அவர் விரும்பும் மாங்காய் தொக்கு செய்ய முடியாமல் திணரும்போது
அன்போடு உதவி செய்யும் மாமியாரின் மனமே சுகம்
மருமகளை மகளாய் பார்த்து
உரிமையோடு அறிவுரை கூறும் மாமனாரின் வார்த்தை சுகம்
கண்ணீர் துளி ஒன்று சிந்தினால்
பதறிப்போய் என்னோடு கண்ணீர் சிந்தும் என்னவரின் துணை என்றென்றும் சுகமே
குற்றம் மறந்து சுற்றம் மட்டுமே பார்த்தால்
வாழ்வெல்லாம் என்றென்றும் சுகமே
வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006
தேடல்
எந்த ஓரத்தில் இருந்தாலும்
யார் கண்ணிலெ பட மறுத்தாலும்
என் கைகளுக்கு மட்டுமே கிடைக்கும்
தொலைந்து போன திருகாணி
கீழே விழுந்த சட்டை பொத்தான்
ஊர்ந்து செல்லும் சிட்டெறும்பு
அப்பா தவற விட்ட பத்து பைசா
இப்படி ஏதேதோ என் கைகளில் கிடைக்க
நான் தேடும் மிட்டாய் மட்டும் கிடைக்கவில்லை
விடுவதாய் இல்லை இன்று
எப்படியும் கண்டுபிடித்தே தீருவேன்
இதோ என் தேடல் ஆரம்பம்
யார் கண்ணிலெ பட மறுத்தாலும்
என் கைகளுக்கு மட்டுமே கிடைக்கும்
தொலைந்து போன திருகாணி
கீழே விழுந்த சட்டை பொத்தான்
ஊர்ந்து செல்லும் சிட்டெறும்பு
அப்பா தவற விட்ட பத்து பைசா
இப்படி ஏதேதோ என் கைகளில் கிடைக்க
நான் தேடும் மிட்டாய் மட்டும் கிடைக்கவில்லை
விடுவதாய் இல்லை இன்று
எப்படியும் கண்டுபிடித்தே தீருவேன்
இதோ என் தேடல் ஆரம்பம்

புதன், ஆகஸ்ட் 09, 2006
பாதை

என் கண் முன்
காண்பிக்கப்பட்டது இரு பாதைகள்
இரண்டிலும் காலடி சுவடுகள்
எந்த பாதை தேர்வு செய்ய
மனம் அறிவைக் கேக்க
இரண்டிலும் பயணித்த அனுபவம் எனக்கில்லை
என அறிவு மெளனம் சாதிக்க
ஆலோசனை கேக்க தந்தையை நாடினால்
தான் பயணித்த பாதை
நானும் தேர்வு செய்ய அவர் கூற
அதை கேட்ட என் தாய்
அவர் பயணித்த பாதையின் பலனை எனக்கு கூற
மூண்டது அவர்களிடையே சண்டை
செல்ல வேண்டிய இடம் தெரிந்தால்
பாதை தேர்வு செய்வதா கடினம்
மூலையில் முடங்கிய தாத்தா குழப்பம் தீர்த்தார் நொடியில்
இரண்டு பாதையும் விட்டு விட்டு
தேர்வு செய்தேன் மூன்றாவதை
இன்று ஆசிரியைஎன்ற முத்திரையில் நான்
சற்றே வருத்தத்துடன் ஒரு டாக்டரும் இஞ்சினியரும்
அதாவது என் பெற்றோர்கள்
நிலா நிலா ஓடி வா
என் செல்லம் இல்ல
என அம்மா கொஞ்ச
எனக்காகடி கண்ணா
என அப்பா கெஞ்ச
பக்கத்து வீட்டு பப்பிக்கு பேச கூட வராது
என என் தாத்தா
என் பேத்தி நா சொன்னாதான் கேக்கும்
என என் பாட்டி
வந்த சுற்றம் என்னை
சுற்றி நின்று கை தட்ட
இப்போதேவா இல்லை இன்னுமொரு
சாக்லெட் கேட்ட பின்னா என்று சிந்தித்தபடி
சிணுங்கலுடன் ஆரம்பித்தேன்
என் குரலில்"நிலா நிலா ஓடி வா"
என அம்மா கொஞ்ச
எனக்காகடி கண்ணா
என அப்பா கெஞ்ச
பக்கத்து வீட்டு பப்பிக்கு பேச கூட வராது
என என் தாத்தா
என் பேத்தி நா சொன்னாதான் கேக்கும்
என என் பாட்டி
வந்த சுற்றம் என்னை
சுற்றி நின்று கை தட்ட
இப்போதேவா இல்லை இன்னுமொரு
சாக்லெட் கேட்ட பின்னா என்று சிந்தித்தபடி
சிணுங்கலுடன் ஆரம்பித்தேன்
என் குரலில்"நிலா நிலா ஓடி வா"
