*அட நான் கூட...

கல்யாணம் பண்ணிப் பார்... வீட்டை கட்டிப் பார்... குழந்தை பெத்துட்டு blog எழுதிப் பார்-னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. குழந்தை பிறந்ததற்கு அப்புறம் கொஞ்சம்னா கொஞ்சம் கூட நேரமே இல்ல, இந்த சமயம் பாத்து நீங்க நட்சத்திரப் பதிவாளரா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள் ஒரு மடல் வந்தா சிரிப்பீங்களா அழுவீங்களா?
ஆனா இந்த வாய்ப்பைக் கூட விட்டுவிட்டால் நான் மறுபடியும் பதிவுலகம் பக்கம் வருவதே சந்தேகத்துக் குறியதாகி விடும் என்ற ஒரே காரணத்திற்காக எழுத முயற்சிக்கிறேன். என்வே குறை குற்றங்களை பொறுத்தருள்க.
அப்பப்ப வந்து வலைப்பூக்கள வேடிக்கை பார்க்கிறதோட சரி, தமிழ்-ல எழுதியே பல காலம் ஆச்சு. அதுனால என்னடா நட்சத்திரப் பதிவே இப்படி மொக்கப் பதிவா இருக்குன்னு யாரும் நினைக்காம கொஞ்சம் ஆதரவு தாங்க இந்த வார இறுதிக்குள் ஒரே ஒரு நல்ல பதிவாவது போட்டுவிடுவேன்.
தமிழ்மண நிர்வாகிகளுக்கும் நான் நட்சத்திரமாக தேர்வாக இருந்த எல்லா காரணிகளுக்கும் மிக்க நன்றி! மீண்டும் ஒரு முறை 'அ' எழுத உதவியதற்கு!
Labels: அ, நட்சத்திரம்
19 மறுமொழிகள்:
நல்வரவு நட்சத்திரமே!!!
நன்றி துளசி!
ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் ஒரு மறுமொழிய எதிர் பார்க்கல
வாருங்கள் சகோதரி! நட்சத்திர வாழ்த்துக்கள்!
நட்சத்திர வாழ்த்துக்கள்.. குழந்தையை பற்றியே எழுதிடுங்க.. அப்பறமென்ன பதிவு க்யூட்ட்ன்னு சொல்லிடுவோம்ல... :)
நட்சத்திர வாழ்த்துக்கள்
எங்க துளசியக்கா வாழ்த்தாத நட்சத்திரமே கிடையாதுங்கோ....அவ்வ்வ்வ்வ்வ்ளோ நல்லவங்க [யக்கா டமாஸு]
நட்சத்திர வாழ்த்துக்கள்
வாருங்கள், வாழ்த்துக்கள் !!
வாழ்த்துக்கள்!
நட்சத்திர வாரத்தில் மறுபடியும் மிக உற்சாகமாய் பதிவுகளில் வலம் வருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்..!
நல்வரவு நட்சத்திரமே!!!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் நட்சத்திரமே...
வாங்க அக்கா, வாழ்த்துக்கள்...
பெரியவங்க பிளாக் எழுதுறத எப்ப சேர்த்தாங்க?
அப்புறம்,
நட்சத்திர வாழ்த்துக்கள்.. குழந்தையை பற்றியே எழுதிடுங்க.. அப்பறமென்ன பதிவு க்யூட்ட்ன்னு சொல்லிடுவோம்ல... :)
ரீப்ப்பீட்ட்ட்ட்டு...
உங்களுக்கு உங்கள் வெல்லக் கட்டி செல்லக் குட்டிக்கும் வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள்!!
நன்றி சுப்பையா சார்
முத்துலெட்சுமி-கயல்விழி கண்டிப்பா குழந்தைய பத்தி எழுதாமலா?
நன்றி கண்மணி, சந்திரன், ரவி
ஆயில்யன், உற்சாகமாய் வலம் வரணும்னுதான் பார்க்கிறேன் :(
மங்களூர் சிவா, நிஜமா நல்லவன் , தமிழன்... சந்தனமுல்லை வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிங்க
சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) அக்காவா?! சரி சரி வாழ்த்துக்களுக்கு மட்டும் நன்றி
//பெரியவங்க பிளாக் எழுதுறத எப்ப சேர்த்தாங்க?// சேத்ததுனால என்னையும் பெரியவங்க லிஸ்ட்ல சேர்த்தாச்சா?!
பதிவு க்யூட்ட்ன்னு சொன்னா சரி நாளைப்பின்ன அவ படிச்சுட்டு என்ன எப்படில்லாம் படுத்தியிருக்கன்னு கேட்டுட்டா என்ன செய்றதுன்னுதான் யோசனை
கோவி.கண்ணன் உங்கள் வாழ்த்துக்களை வெல்லக் கட்டி செல்லக் குட்டிக்கு சொல்லியாச்சு
நன்றிகள் பல
இதுலே என்ன யோசனை?
நீங்க படுத்துனதெல்லாம் எழுதணும். நாங்க, 'ச்சோ ச்ச்ச்வீட்' ன்னு சொல்வோம்:-))))
Post a Comment
<< முகப்பு