பாதை



என் கண் முன்
காண்பிக்கப்பட்டது இரு பாதைகள்
இரண்டிலும் காலடி சுவடுகள்

எந்த பாதை தேர்வு செய்ய
மனம் அறிவைக் கேக்க
இரண்டிலும் பயணித்த அனுபவம் எனக்கில்லை
என அறிவு மெளனம் சாதிக்க

ஆலோசனை கேக்க தந்தையை நாடினால்
தான் பயணித்த பாதை
நானும் தேர்வு செய்ய அவர் கூற

அதை கேட்ட என் தாய்
அவர் பயணித்த பாதையின் பலனை எனக்கு கூற
மூண்டது அவர்களிடையே சண்டை

செல்ல வேண்டிய இடம் தெரிந்தால்
பாதை தேர்வு செய்வதா கடினம்
மூலையில் முடங்கிய தாத்தா குழப்பம் தீர்த்தார் நொடியில்

இரண்டு பாதையும் விட்டு விட்டு
தேர்வு செய்தேன் மூன்றாவதை
இன்று ஆசிரியைஎன்ற முத்திரையில் நான்
சற்றே வருத்தத்துடன் ஒரு டாக்டரும் இஞ்சினியரும்
அதாவது என் பெற்றோர்கள்

12 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

GoodOne

2:11 AM  

Blogger Geetha Sambasivam said...

சரியான முடிவு. கவிதை நல்ல பொருட்செறிவுடன் அமைந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் கவிதை என்றால் என்ன என்று புரிந்து வைத்திருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

2:47 AM  

Anonymous Anonymous said...

doctorum engineerum teacher aga eppadi viduvanga

3:26 AM  

Blogger Unknown said...

புன்னகைப் பூக்க வைத்தப் பதிவு...டாக்டரும் இன்ஞ்னியரும் ஒரு நாள் பெருமைப் படத் தான் போறாங்கப் பாருங்க:)

7:48 AM  

Blogger இராம்/Raam said...

அனிதா,

கவிதை அருமை.... நீங்கள் சொல்ல வந்ததை மிகச்சிறப்பாக உணர்த்துகின்றன உங்களின் எழுத்துக்கள்....

பாரட்டுக்கள்.

7:51 AM  

Blogger Anu said...

Thanks geetha and ram
Dev...this poem is what I wrote when my friend became a teacher against her parents wish..
na..ellarayum pola software industryladan kuppa kottitu irukken.

1:24 AM  

Blogger மா.கலை அரசன் said...

நன்றாக உள்ளது.

9:46 AM  

Blogger Clown said...

இந்த கவிதை ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய "Road not taken" -னின் மொழியாக்கம்/தழுவல்.நன்றாக செய்திருக்கிறீர்கள்.

Ofcourse, சிந்தனைகள், சிந்தனையாளர்களுக்கு தெரியாமல் நிலவுவதும் முற்றிலும் உண்மை தான்.

3:45 PM  

Blogger FunScribbler said...

hey anitha, ரொம்ப நல்லா இருந்தியிருக்கீங்க..வாழ்த்துகள்! உங்க மற்ற படைப்புகளையும் படிச்சேன்...ரொம்ப நல்லா எழுதுறீங்க.. keep going anithz..
adios cheers!

10:08 AM  

Blogger Anu said...

Thanks veda.
Endha blogla competition..I am not getting that link.

9:32 PM  

Anonymous Anonymous said...

nice 1 :)

2:50 AM  

Anonymous Anonymous said...

Hey,

I'm spending my time here for the children of Haiti.

I'm here for a non-profit haiti organization that spends their time to
creating an oppurunity for the kids in haiti. If anyone wants to help then do so here:

Donate to Haiti or Help Haiti

They provide children in Haiti a positive learning environment.

Please check it out, they're a real cause.

Anything would be appreciated

11:31 AM  

Post a Comment

<< முகப்பு