தீ நகர்
ஹாய் மதன்: கேள்வி பதில்
விக்கிரமாதித்தன், ஜேடர்பாளையம்.
இந்தியாவில் உள்ள பெரிய குறை என்ன?
மக்களின் அசாத்தியப் பொறுமை!
நான் சொல்ல வந்த செய்தி என்னமோ மேலேயே முடிந்து விட்டது. இருந்தாலும் சமூக அக்கறை உள்ள இரண்டே இரண்டு பெயர்களை குறிப்பிட்டாக வேண்டுமென்ற ஒரே நோக்கில்...
எம்.ஏ.ஜவஹர் இதே தலைப்பில்,ஜூனியர் விகடனில் கோபசாரியின் டைரியிலிருந்து என்ற பகுதியில் இந்த வருட ஆரம்பத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வழக்கம் போல் செவிடம் காதில் ஊதிய சங்கானது. நெருப்புன்னா வாய் வெந்துராது என்பார்கள்... ஆனால் அன்னைக்கு நெருப்புன்னு சொன்னது இன்னிக்கு வெந்து தணிஞ்சுருக்கு!
அடுத்ததா டிராஃபிக் ராமசாமி, சமீபத்தில கருணாநிதிய எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போனாரே அவர்தான், அவரும் இது விஷயமா ஒரு வழக்கு போட்டாரு. அது தலைல கல்லப் போடு இல்ல கமிஷனப் போடுன்ற பாணியில அந்த வழக்கு இன்னும் தூங்குது!
பி.கு: மேலே சொன்ன விகடன் முகவரி எடுப்பதற்காக போனால் ஓடும் வரிச் செய்தியில் கீழ் கண்ட வாசகம்...
சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து: விதிமுறைகளின்படி கட்டியிருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது:முதலமைச்சர் கருணாநிதி கருத்து
தலைல அடிச்சுக்கிட்டேன்... என் கேள்வியெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான் முதலமைச்சர் கருத்தின் அடிப்படையில் உங்களுக்கு இழப்பீடு கிடையாது என்று இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் சொல்லுமா? ஒருவேளை மேலே இரண்டு பேர் செய்ய நினைத்ததை இது செய்யலாம்!
அது சரி... நாம் மெய்யாலுமே அசாத்தியப் பொறுமைசாலிங்கதானோ...

10 மறுமொழிகள்:
கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் தான் நம்ம அரசியல்வாதிகளின் வழக்கமான செயல்
இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போகல இனிமேல்தான் வருசையா பண்டிகைகள் வருது அதுக்குள்ளயாவது சரி செஞ்சா பாராட்டலாம் சரிதானே வால்பையன்
//இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போகல இனிமேல்தான் வருசையா பண்டிகைகள் வருது அதுக்குள்ளயாவது சரி செஞ்சா பாராட்டலாம் சரிதானே//
கூடவே தேர்தலும் வருதே!
நிதி பாதிக்கப்படுமே
//சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து: விதிமுறைகளின்படி கட்டியிருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது:முதலமைச்சர் கருணாநிதி கருத்து//
யாரு மேல குத்தம்ன்னு யாருமே கரீக்டா சொல்ல மாட்டீங்கறாங்க அதுவும் கூட ஒரு பெரிய பிரச்சனை!
விதிமுறைகளின்படி கட்டுவது அந்த கடை உரிமையாளர்களின் எண்ணமாக இருக்கவேண்டுமா?
விதிமுறைகளினை கண்காணிப்பது அரசு இயந்திரங்களின் எண்ணமாக இருக்கவேண்டுமா?
ஒண்ணுமே தேவையில்ல ஏன்னா நாம நம்ம இந்தியாவுல இருக்கோம்ப்பா!
ஆயில்யன் நம்ம ஊர்ல அரசு இயந்திரம் வேலை செய்யக் கூடாதுன்னுதானே ஆயிலே போடறாங்க
//ஏன்னா நாம நம்ம இந்தியாவுல இருக்கோம்ப்பா!// உண்மையாவதில் வருத்தம்தான்
//கூடவே தேர்தலும் வருதே!
நிதி பாதிக்கப்படுமே// ஓட்டுரிமை என்னமோ நமக்குத்தான் இருக்கு ஆனா நிலைமைய பாருங்க வால்பையன் நம்ம எப்படி புலம்பிக்கிட்டு இருக்கோம்னு...ஹ்ம்ம்
பெரிய வணிக வளாகங்களில் ஸ்ரிங்க்லர் எனப்படும் தீ ஏற்படும் போது தானாகவே தண்ணீரை தெளித்து தீயை அணைக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.. இவைகளைக் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை தான்..... வியாபார லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட கடை முதலாளிகள் இதிலெல்லாம் கவனம் செலுத்த மாட்டார்கள்!
எத்தனை தடவை இதுமாதிரி நடந்தாலும் தாங்கிட்டு 2 நாள்ல மறந்துட்டு போய்டுவோம்.
ஏன்னா நாம ரொம்ப நல்லவங்க....
அனிதா,
இவங்க கடைக்குப் போறவங்க லிஸ்டை விட போகாதவங்க பட்டியலே பெரிசா இருக்கும்.
உஸ்மான் ரோட்டு போவதையே நிறுத்தி நாளாச்சு.
//யாரு மேல குத்தம்ன்னு யாருமே கரீக்டா சொல்ல மாட்டீங்கறாங்க அதுவும் கூட ஒரு பெரிய பிரச்சனை! //
ஆயில்யன் யாராவது வந்து ஒத்துக்கப் போறாங்கன்னு நம்பறிங்களா:)
அனுமதியில்லாம கட்டிடம் கட்டுவாங்களாம் அதுக்கப்புறம் அபராதம் எல்லாம் கட்டி அனுமதி வாங்கிப்பாங்களாம் சென்னையில் முக்கியமான எல்லா இடங்களிலும் இதுதான் நடக்கிறது. பணத்திற்கு முன் சட்டம் வளையும்போது ஒன்னும் செய்ய முடியாது.
அந்த மாதிரி இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நமக்கு பாதுகாப்பு
Post a Comment
<< முகப்பு