காத்திருக்கிறேன்.


களைத்து இருக்கும் முகங்கள்
கலைந்து செல்லும் சிறுவர்கள்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில வண்டிகள்
குரைத்துக் கொண்டு இருக்கும் நாய்
மெதுவாய் மறையும் சூரியன்
கொஞ்சம் பசியுடன்
கொஞ்சம் கோவத்துடன்
வழக்கம் போல் வாசலில் காத்திருக்கும் நான்
அலுவலகம் சென்ற என் அம்மாவின் வருகைக்காக

14 மறுமொழிகள்:

Blogger இராம்/Raam said...

அனிதா,

நல்ல இருக்குங்க...

4:40 AM  

Blogger ரவி said...

சிறப்பான உங்கள் கவிதைக்கு என் முதல் வாழ்த்து - அத்தோடு,

அந்த படம் - அருமை..

7:23 AM  

Blogger Anu said...

I once again had some font problems..so I couldnt read any comments unless I publish...
adanala..directa publish panniten..
And Thank you very much kadal Ganeshan,Ram and Ravi.
Its really very encouraging

8:45 AM  

Blogger அனுசுயா said...

nalla kavithai varikal. Nalla eluthreenga unga eluththu thodara vazhthukkal.

2:28 AM  

Anonymous Anonymous said...

Adhooo amma vandachu.
kaalayilurundhu, iravu padukum varai, kadigaara mutkalodu pottipotttu
uzahikum yen amma, vandachu.
Avargal Udalum manadhum kalaindhu poiirundalum, yennai parthadum oodi vandhu anaithu kondar.
Andha anaipil, yen kalaipu kalaindhu ponadhu.

10:09 AM  

Blogger  வல்லிசிம்ஹன் said...

அனிதா, என்ன ஒரு வருத்தம் அந்தக் குழந்தையின் கண்களில்.
பசி,தூக்கம், அம்மா வராத துக்கம்.
நீங்களும் காத்து இருப்பீர்களா
மாலை நேரம்?

அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து வேலை +படிப்பு இருக்ககூடாதோ!!
நல்ல பதிவுஅனிதா. தொடர வாழ்த்துக்கள்.

7:53 PM  

Blogger உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல கவிதை,
நல்ல படம்,
தொடர்ந்து எழுதுங்கள்...


அன்புடன்...
சரவணன்.

8:59 PM  

Blogger ராசுக்குட்டி said...

புகைப்படம் அருமை... பொருத்தமான வரிகள்!

கீற்றாய் உதித்த நிலவு
இரவு உணவு... எல்லாம் தயாராய்
கொஞ்சம் பசி
கொஞ்சம் ஆற்றாமையுடன்
தொலைபேசி பார்த்திருந்தேன்

அன்பு மகள் அழைத்தால்
மருந்தும் விருந்தாகுமென்று!

12:45 AM  

Blogger கோவி.கண்ணன் [GK] said...

//கொஞ்சம் பசியுடன்
கொஞ்சம் கோவத்துடன்
வழக்கம் போல் வாசலில் காத்திருக்கும் நான்
அலுவலகம் சென்ற என் அம்மாவின் வருகைக்காக//
மிக அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள் ... ! நன்றாக இருக்கிறது அனிதா அவர்களே !

6:25 PM  

Blogger கடல்கணேசன் said...

(not for publication)
Thank you Mrs.Anitha. I appreciate your response.. My feedback contained some personal reference, that's why I asked you to remove that.. No other reason.. Hope you will understand.. Next time I will avoid that kind of personal remarks so that it can be published.. sorry for the inconvenience caused by me.. Write more.. Thanks again..-kadalganesan

3:16 AM  

Blogger G Gowtham said...

அனிதா,
படத்துக்கு எழுதுகிறீர்களா?
அல்லது எழுதிவிட்டுப் படம் தேடுகிறீர்களா??
நான் ஏற்கெனவே சொன்னதுதான்..
உங்கள் சிந்தனைகளில் பொறி இருக்கிறது.
விடாதீர்கள், விரட்டிப் பிடியுங்கள்.

10:29 PM  

Blogger Anu said...

Thank you everyone
actually photova patthadum...ammakkaga wait pannina neram dan nyabagam vanduchu

1:32 AM  

Anonymous Anonymous said...

Antha photovukku yetra kavithai, continue :)

2:41 AM  

Blogger Unknown said...

என் குழந்தையை இப்படித் தவிக்க விட நேரிடுகிறதே என்ற தாயின் ஏக்கம் போல் எனக்குத் தெரிகிறது. நல்ல கவிதை.

3:07 AM  

Post a Comment

<< முகப்பு