இனிது இனிது


முதலில் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

இன்று காலையில் இருந்தே எங்கள் வீட்டில் பட்டிமண்டபம்தான்...
என் கணவர் தெலுங்கு..நான் தமிழ்....அதனால் விநாயக சதுர்த்திக்காக தமிழ் பாடல் போடுவதா...தெலுங்கு பாடல் போடுவதா..என ஒரு சிறு ஊடல்...

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்..என நானும்...

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என என் கணவர்...

தமிழ் இனிதா...தெலுங்கு இனிதா...என்று நாங்கள் பேசிகொண்டிருக்க....

என் ஒரு வயதே நிரம்பிய மகள்...அம்மா..என்று குரல் குடுக்க...

அந்த மழலையின் குரல் கேட்ட பின்னர்..ஊடலாவது ஒண்ணாவது...

இதைத்தான் சொன்னாரோ வள்ளுவர்
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்"

5 மறுமொழிகள்:

Blogger வால்பையன் said...

தொலைக்காட்சியை அனைத்து போட்டு குழந்தையுடன் விளையாடுங்கள்.
கரண்டும் மிச்சம், மனசுக்கும் நிம்மதி

8:57 AM  

Blogger மங்களூர் சிவா said...

/

தமிழ் இனிதா...தெலுங்கு இனிதா...என்று நாங்கள் பேசிகொண்டிருக்க....
/

வெறும்னு பேசிகிட்டுமட்டும்தான் இருந்தீங்களா??

ஒரு இண்ட்ரஸ்ட்டே இல்லாம 'சப்'னு இருக்கே

:))))))))))






(ச்சும்மா ஜோக்கு கோவிச்சிக்கப்படாது)

9:25 AM  

Anonymous Anonymous said...

arumaiyaana kural...

12:07 PM  

Blogger சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அப்ப குழந்தைக்கு தமிழ்தான் சொல்லிகொடுக்கிறீர்களோ?

10:28 AM  

Blogger jeevagv said...

//தமிழா, தெலுங்கா?//
அப்போ, நீங்க கேட்க வேண்டிய பாட்டு இது:
http://www.youtube.com/watch?v=SgmYeyN9qxY

5:39 PM  

Post a Comment

<< முகப்பு