வால்-இ - திரைப்பார்வை


குசேலன், சத்யம், தாம் தூம்... என்று நம் படங்கள் தொடர்ந்து சோதிக்க சென்ற வெள்ளிக் கிழமை (wall-E) வால்-இ என்ற ஆங்கிலப் படத்திற்கு சென்றோம். ஆங்கிலப் படமென்றால் பொதுவாக விமர்சனங்களைப் படித்துவிட்டு முழுக் கதையையும் தெரிந்த பின்னே செல்வது வழக்கம். மொழி தெரியாத இடத்துல போய் கழுத்துல வெட்டு வாங்கக் கூடாது இல்லிங்களா?

ஆனால் வால்-இ விஷயத்தில் தலையும் புரியாமல் 'வால்'-ம் புரியாமல் போய் உக்காந்தாச்சு. பிக்ஸர் நிறுவனத்தின் மேல் நம்பிக்கை இருந்தது வேறு விஷயம். வழக்கம்போல் இந்த முறையும் குடுத்த காசுக்கு குறை வைக்கவில்லை... இல்லை இல்லை மேலே சொன்ன எல்லா தமிழ் படங்களில் விட்ட காசக் கூட திருப்பி கொடுத்து விட்ட திருப்தி.

உலகம் அழிந்த பின்னர் வரும் ஒரு மயான அமைதியுடன் ஆரம்பிக்கிறது படம், வானுயர்ந்த கட்டிடங்கள் வழியாக பயனிக்கும் கேமரா அருகே செல்ல செல்ல உயர்ந்த கட்டிடங்கள் அனைத்தும் குப்பைகள் என்று தெரிய வரும்போது வரும் அதிர்ச்சியை தவிர்க்க முடியவில்லை. குப்பைகள் அதிகம் சேர்ந்து மனித இனமே வாழ இயலாத அளவுக்கு, கிபி 2700ம் ஆண்டு பூமி மாறி விடுகிறது.

வால்-இ என்ற ஒரே ஒரு ரோபோ மட்டும் பூமியில் குப்பைகளை பிரித்து அமுக்கி செங்கலாக்கி அடுக்கி வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. சதுர தகரத்தில் உடம்பும், முட்டை முட்டையாய் இரண்டு பைனாகுலர் கண்ணுமாய் முதல் பார்வையிலேயே மனத்திற்கு இனக்கமாகி விட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு வசனங்களே கிடையாது. மொத்தப் படத்திற்கான வசனத்தை ஒரு பாக்கட் நாவல் பக்கத்தில் எழுதிவிடலாம்.

வால்-இ, குப்பைகளை பிரிக்கையில் கண்ணில் படும் விளையாட்டு சாமான்களை பத்திரப்படுத்தும் போது நமக்கு நெருங்கிய நண்பனாகி விடுகிறது. குப்பை மேட்டில் ஒரே ஒரு செடியைப் பார்த்து அதை ஒரு பிய்ந்த காலணியில் வைத்து தண்ணீர் ஊற்றி வளரச் செய்யும் அழகே அழகு. பின்னர் அதை விட தொழில்நுட்பத்தில் சிறந்த ரோபோ ஒன்று வேறு கிரகத்திலிருந்து வருகிறது. முதலில் பயந்து ஒளியும் வால்-இ, அது மின்சாரம் தாக்கி செயலிளக்கும் போது உதவ இரண்டும் நெருக்கமாகி விடுகின்றன.

வால்-இ என்றும் ஈவா என்றும் இரண்டும் மாற்றி மாற்றி அழைக்க அது இந்த வருடத்தின் மிகச் சிறந்த காதல் வசனமாகி விடும் அனுபவத்தை நீங்களே நேரில் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். (என் அலைபேசியின் அழைப்பொலி வால்-இ-ஈவா தான்!) பழைய காதல் பாடலொன்றை தொலைக் காட்சியில் பார்த்து, வால்-இ ஈவாவின் விரல்களைப் பற்றும் ஆசையில் நெருங்கி அது கைகூடாத தருணங்களில் நாம் பார்ப்பது ரோபோக்கள் என்ற உணர்வே வருவதில்லை. ஆகச் சிறந்த ஒரு காதல் ஜோடியின் மிகச் சிறந்த தருணங்களை பார்க்கும் உணர்வே மேலோங்குகிறது.

வால்-இ ஈவாவுக்கு அந்த செடியை காதல் பரிசாக அளிக்கிறது. பின் அதுவே வேற்று கிரகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு பூமி மறுபடியும் உயிர் இருப்பதற்கான சாட்சியமாகிறது. மனிதர்கள் தன் தாய்மண் தேடி வந்தார்களா? வால்-இ, ஈவாவின் விரல்கள் இணைந்தனவா? என்பதை மிக மிக சுவைபட கூறியிருக்கும் Andrew Stanton ஆன்ட்ரூ ஸ்டேண்டன்க்கும், இந்த இரண்டு ரோபோக்களின் குரல்களை உருவாக்கிய Ben Burtt பென் பர்ட்-க்கும் பாராட்டுக்கள்.

அய்யய்யோ முழு கதையையும் சொல்லி உங்கள் பார்க்கும் அனுபவத்தை கெடுத்து விடப் போகிறேன். மொத்ததில் இந்தப் படம் பார்த்து முடிக்கும் பொழுது இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகளுடன் சிரித்துக் கொண்டு வெளியேறுவீர்கள், உங்களது காதலன்/காதலி/கணவன்/மனைவியை இன்னும் கொஞ்சம் காதலாய் பார்ப்பீர்கள், மக்கும்/மக்காத குப்பையை கவனமாக பிரித்துப் போடுவீர்கள், ஒரே ஒரு செடியாவது வைத்து தண்ணீர் ஊற்றும் ஆசை அதிகரித்து இருக்கும், வாய்ப்பு வசதி இருக்கிற மவராசனுங்க அதையும் செஞ்சுருப்பீங்க! Gudos Pixar!

Labels: , , ,

23 மறுமொழிகள்:

Blogger உண்மைத்தமிழன் said...

கண்டிப்பாகப் பார்க்கிறேன்.. தூண்டுதலான விமர்சனம்.. நன்றிகள்..

1:09 AM  

Blogger வால்பையன் said...

விமர்சனங்களில் நான் எப்போதுமே முதலில் பார்ப்பது கடைசி பாராவைதான்.
அங்கே தான் நீங்கள் இருப்பீர்கள்,
எதிர்பார்த்ததைப்போலவே அங்கே இருக்குகிறீர்கள்.

படத்தை நானும் பார்த்தேன். சுற்றுசூழல் மேல் விழிப்புணர்வு ஏற்படுத்த இம்மாதிரியான படங்கள் கண்டிப்பாக தேவை

4:22 AM  

Blogger ஆயில்யன் said...

வால் - இ நானும் பார்த்துவிட்டேன்!

//மொழி தெரியாத இடத்துல போய் கழுத்துல வெட்டு வாங்கக் கூடாது இல்லிங்களா?//


கண்டிப்பாக அதான் மியூட் ஆப்ஷன் வைச்சுக்கிட்டேன் :))

நல்லா இருக்கு! அதுவும் அந்த இரண்டு ரோபோக்களின் காதல்!
- தூய்மையான அன்பு காட்சிகளில் கலக்குகிறது!

4:31 AM  

Blogger மங்களூர் சிவா said...

அட்டகாசமான விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது!

6:20 AM  

Blogger இவன் said...

நிச்சயமாக பார்க்கிறேன்

6:34 AM  

Blogger நிஜமா நல்லவன் said...

நான் இன்னும் பார்க்கலைங்க....கண்டிப்பா பார்க்கிறேன்!

3:22 PM  

Blogger நிஜமா நல்லவன் said...

உங்க விமர்சனம் சூப்பர்!

3:22 PM  

Blogger நிஜமா நல்லவன் said...

//ஆயில்யன் said...

வால் - இ நானும் பார்த்துவிட்டேன்!

//மொழி தெரியாத இடத்துல போய் கழுத்துல வெட்டு வாங்கக் கூடாது இல்லிங்களா?//


கண்டிப்பாக அதான் மியூட் ஆப்ஷன் வைச்சுக்கிட்டேன் :))

நல்லா இருக்கு! அதுவும் அந்த இரண்டு ரோபோக்களின் காதல்!
- தூய்மையான அன்பு காட்சிகளில் கலக்குகிறது!//

ஆயில்ஸ் என்கிட்டே சொல்லாம பார்த்துட்டீங்களா?

3:24 PM  

Blogger தமிழன்-கறுப்பி... said...

அட நல்லாருக்கே...

கட்டாயம் பாத்துடணும் மொழி தெரியாட்டி என்ன மாட்டர் என்னன்னு நீங்க சொல்லிட்டிங்களே இனி புரிஞ்சுக்குவோம்...:)

4:15 PM  

Blogger Unknown said...

வணக்கம். இது வரை உங்கள் பதிவுகளைப் படித்ததில்லை, இனிமே படிக்கிறேன்... நட்சத்திர வாழ்த்துகள்.

வால்-இ என் பார்வையில் இங்கே க்ளிக்கவும் (நாங்கள் வந்த அன்னிக்கே துண்டு போட்டு பாக்குற கேஸூ)

7:57 PM  

Blogger Bee'morgan said...

அருமையான விமர்சனம் பவன்குமார்.. :) நானும் பார்த்தேன்.. படம் முடிந்து ரொம்ப நேரத்துக்கு, என்னால் வேறெதையும் நினைத்துகூடப் பார்க்கமுடிய வில்லை. திரும்பத்திரும்ப அசைபோட்டாலும், கொஞ்சமும் சலிக்கவில்லை.. நிச்சயம் இன்னொரு முறை பார்க்கவேண்டும்.. Wall-E என்ன ஒரு சிருஷ்டி.. நான் கூட முதலில் சந்தேகித்தேன், ஒரு ரோபோவில் எப்படி உணர்ச்சிகளைக் காட்சிப் படுத்த முடியும் என்று.. ஆனால், அந்த பைனாகுலர் கண்களில்தான், ஆசை, காதல், குறுகுறுப்பு, பயம் என்று எத்தனை உணர்ச்சிகள். I love it. Wall-E தான் இப்போ என் Wall -Paper. :)
//
வழக்கம்போல் இந்த முறையும் குடுத்த காசுக்கு குறை வைக்கவில்லை... இல்லை இல்லை மேலே சொன்ன எல்லா தமிழ் படங்களில் விட்ட காசக் கூட திருப்பி கொடுத்து விட்ட திருப்தி.
//
வாஸ்த்தவமான பேச்சு.. :)

9:35 PM  

Blogger கபீரன்பன் said...

புதுமையான கருத்துள்ள படத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

முன்னோட்டம் காண விழைவோர் இங்கே சுட்டலாம்

10:27 PM  

Anonymous Anonymous said...

நல்ல விமர்சனம். நானும் படத்த பார்த்தேன். நா நினைத்ததை உங்கள் பதிவு கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறது.
கண்டிப்பாக ஒரிஜினல் Divx வந்ததும் மீண்டும் பார்க்கணும்.

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்
சுபாஷ்

11:51 PM  

Blogger Anu said...

உண்மைத் தமிழன் கண்டிப்பா பாருங்க... சரி எதுக்கு அவ்ளோ பெரிய எண் உங்க பேரோட ஒட்டிகிட்டு இருக்கு... நியூமராலஜி?!

வால்பையன்-னு பேர சரியாத்தான் வச்சுருக்கீங்க... முதலில் கடைசி பாராவ படிச்சேன்னு சொன்னீங்களே அதுக்கு சொன்னேன் :)

9:48 AM  

Blogger Anu said...

ஆயில்யன் மியூட்டடிச்சிட்டிங்களா வால்-இ ஈவான்னு கூப்பிடறத கேக்கவேயில்லயா அது ரொம்ப கலக்கலா இருந்துச்சு!!

//தூய்மையான அன்பு காட்சிகளில் கலக்குகிறது!// உண்மை

மங்களூர் சிவா கண்டிப்பா பாருங்க

9:50 AM  

Blogger Anu said...

இவன் நிச்சயமாக பார்ப்பான்(ர்) ;)

நிஜமா நல்லவன், நிஜமாகவே நன்றி, நிஜமா நல்லாருக்கும் கண்டிப்பா பாருங்க!!

தமிழன்... அட மொழியே தேவையில்லைங்க இந்த படத்த பாக்க, உடனே அந்த மாதிரி படம்னு நினச்சுறக்கூடாது சரியா

9:54 AM  

Blogger Anu said...

கெக்கேபிக்குணி அதென்ன நீங்களும் இவ்ளோ பெரிய எண்ணை ஒட்ட வெச்சுகிட்டு... இங்க சிங்கப்பூரில் இப்போதான் வெளியாச்சு... நீங்க எப்பவோ பாத்திட்டிங்க போல...ம்ம்ம்... உங்க விமர்சனமும் நல்லா இருந்துச்சு இனி அந்தப் பக்கம் அடிக்கடி எட்டிப் பார்ப்பேன்

10:00 AM  

Blogger Anu said...

Bee'morgan //திரும்பத்திரும்ப அசைபோட்டாலும், கொஞ்சமும் சலிக்கவில்லை..// same here yaa

//Wall-E என்ன ஒரு சிருஷ்டி.. நான் கூட முதலில் சந்தேகித்தேன், ஒரு ரோபோவில் எப்படி உணர்ச்சிகளைக் காட்சிப் படுத்த முடியும் என்று.. ஆனால், அந்த பைனாகுலர் கண்களில்தான், ஆசை, காதல், குறுகுறுப்பு, பயம் என்று எத்தனை உணர்ச்சிகள்.// உண்மை நானும் வியந்துதான் போனேன் I too love it.

கபீரன்பன் பெயர் நல்லாருக்கு... வருகைக்கு நன்றி

10:04 AM  

Blogger Anu said...

//நா நினைத்ததை உங்கள் பதிவு கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறது.
கண்டிப்பாக ஒரிஜினல் Divx வந்ததும் மீண்டும் பார்க்கணும்.//
ஒரிஜினல் Divx எங்க வரும்ன்றதயும் சொன்னீங்கன்னா... ஹி ஹி

//நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்// நன்றி சுபாஷ்

10:07 AM  

Anonymous Anonymous said...

இந்த வார இறுதிக்கு 500 ரூபாய் செலவு வைத்துவிட்டது இந்த பதிவு..

பாப்கார்ன் காசையாவது தந்தி மணியார்டரில் அனுப்பவும்...

1:52 AM  

Blogger Shankar said...

படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்கிற தூண்டுதலை ஏற்படுத்தியது உங்களின் இந்த பதிவு. விவசாயம் மீது மதிப்பும், ஆவலும் அதிகமாகி விட்டது இந்தப்படம் பார்த்த பிறகு.

11:23 AM  

Blogger முகவை மைந்தன் said...

//சதுர தகரத்தில் உடம்பும், முட்டை முட்டையாய் இரண்டு பைனாகுலர் கண்ணுமாய் முதல் பார்வையிலேயே மனத்திற்கு இனக்கமாகி விட்டது.//

நேர்த்தியாக விவரிக்கிறீர்கள்.



// ஒரே ஒரு செடியாவது வைத்து தண்ணீர் ஊற்றும் ஆசை அதிகரித்து இருக்கும், வாய்ப்பு வசதி இருக்கிற மவராசனுங்க அதையும் செஞ்சுருப்பீங்க!//

:-)))

நண்பர் பரிந்துரையால் பார்த்தேன். அருமையான படம். சுற்றுச்சூழல் குறித்து பெரியவர்களிடம் சொன்னால் வேலைக்காகாதென்று குழந்தைகளிடம் சொல்ல முற்பட்டார்கள் என நினைக்கிறேன் :-)

7:50 PM  

Anonymous Anonymous said...

ungalin vimarisanam...kitta thata...tv la kettatha polave irrukku...it is really very nice...please post new blogs..Ramanan

12:40 PM  

Post a Comment

<< முகப்பு