உறவுகள் சுகம்
களைத்து போய் கண் மூடும் வேளையில்
அம்மாவின் அரவணைப்பு சுகம்
இரவு 12 மணிக்கு ஜுரம் வந்தால்
ஒடி போய் மருந்து வாங்கி வரும் அப்பாவின் பாதுகாப்பு சுகம்
இருட்டரதுக்குள்ள வீடு வந்து சேரு
கவலையில் சொல்லும் பாட்டியின் அக்கறை சுகம்
என் பேத்தி என்றும் புதுமை பெண்
என வசனம் பேசும் தாத்தாவின் பேரன்பு சுகம்
சண்டை போடவே பிறந்தாளோ என சந்தேகம் வந்தாலும்
என் வெற்றி கண்டு பூரிப்படையும் என் தங்கையின் பாசம் சுகம்
தன் சேமிப்பை கரைத்து ராக்கி அன்று
என் கையில் பரிசை தரும் அண்ணனின் ஆதரவு சுகம்
என் சந்தோஷம் மட்டுமல்ல துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும்
தோழிகளுடனான உரையாடல் சுகம்
அவர் விரும்பும் மாங்காய் தொக்கு செய்ய முடியாமல் திணரும்போது
அன்போடு உதவி செய்யும் மாமியாரின் மனமே சுகம்
மருமகளை மகளாய் பார்த்து
உரிமையோடு அறிவுரை கூறும் மாமனாரின் வார்த்தை சுகம்
கண்ணீர் துளி ஒன்று சிந்தினால்
பதறிப்போய் என்னோடு கண்ணீர் சிந்தும் என்னவரின் துணை என்றென்றும் சுகமே
குற்றம் மறந்து சுற்றம் மட்டுமே பார்த்தால்
வாழ்வெல்லாம் என்றென்றும் சுகமே
15 மறுமொழிகள்:
ஒரு குடும்பத்திலுள்ள அத்தனை உறவுகள் பற்றியும் அழகா சொல்லி இருக்கிங்க.
ஏங்க உங்க வீட்ல இதனை பேர் இருக்காங்களா?
பொறாமையா இருக்குங்க. ((:
உங்கள் கவிதையும் வாசிப்பதற்கும் மனதிற்கும் சுகமாகவே உள்ளது.
அனிதா,
வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
ஆமாம்!!
சுமையாகக் கருதாதவரை,
குற்றம் பார்க்காதவரை,
சுற்றம்,
ஆனந்தம் தரும்.
அதற்கு நிறைய உழைப்பும் வேண்டும். வாழ்த்துகள்.
:-)
indha madhiri uravugal amanjitta
neenga solra madiri vaazhkai sugamdan
ரொம்ப அழகாயிருக்கு உங்க கவிதை.
//குற்றம் மறந்து சுற்றம் மட்டுமே பார்த்தால்
வாழ்வெல்லாம் என்றென்றும் சுகமே//
இம்மாதிரி முடித்திருப்பது இக்கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒவ்வொரு உறவிடமும் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று கூறிய நீங்கள் கடைசி இருவரிகளில் அவ்வுறவுகளைப் பேண நாம் என்ன செய்ய வேண்டும் என விளக்கியுள்ளீர்கள். வெகு சிறப்பு.
அனிதா,
நல்ல கவிதை. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். இப்படி உறவுகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். நிச்சயமாக நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு அனிதா!
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைதான்!
இதை படிக்கும் போதே ஒரு சுகம் வருது. இந்த சுகங்கள் எல்லாருக்கு வாய்க்குமா அனிதா அவர்களே!? இத்தனை சுகம் அனுபவிக்கு உங்களை நினைத்தாலே பொறாமையா இருக்கு.
Thank you everyone
enakku ennamo..nammalla neraia perrukku indha madiri uravugal irukku
chinna chinna varuththam kovam idellam marandhutta..ella uravugalum sugaththaithan tharumnu nambaern
I lked it wish i have such relations.
//குற்றம் மறந்து சுற்றம் மட்டுமே பார்த்தால் வாழ்வெல்லாம் என்றென்றும் சுகமே//
குற்றமும் சுற்றமும் பிரியாதவை.
கவிதை சுகமோ சுகம்.
////என் சந்தோஷம் மட்டுமல்ல துக்கத்தையும் பகிர்ந்து.....தோழிகளுடனான உரையாடல் சுகம்....
மருமகளை மகளாய்..
பதறிப்போய் என்னோடு கண்ணீர் சிந்தும் என்னவரின் துணை என்றென்றும் சுகமே
குற்றம் மறந்து சுற்றம் மட்டுமே பார்த்தால்
வாழ்வெல்லாம் என்றென்றும் சுகமே////
நீங்க சொன்னது போல எல்லாரும் இந்த மாதிரி குற்றம் பார்க்காம இருந்தா ஒவ்வொரு நாளும் இனிய நாள் தான்..
உறவுகளை விட்டு ரொம்பதூரம் இருக்கும் எனக்கு, மனசுக்கு இதமா இருக்கு உங்க கவிதை..கண்களில் நீர் வரவச்சிடுச்சு
வாழ்த்துக்கள் அனிதா
mangai and shiva
thank you very much.
mangai uravugala vittuttu nama nenachalum dhoorama irukka mudiadhu
avanga ellarum namma manasula eppavume iruppanga
so keep smiling ;)
Romba anubavichu eshuti irukeenga, continue :)
Post a Comment
<< முகப்பு