நீங்களே சொல்லுங்க இது நெசமா?

என்னுடைய நண்பனொருவனுக்கு இன்று பிறந்தநாள். அவன அப்டி இப்டி திட்டி தாஜா பண்ணி ட்ரீட் கொடுக்க சொல்லி நட்சத்திர ரொட்டி (bucks க்கு ரொட்டின்னு ஒரு அர்த்தம் இருக்கு தெரியுமா? காசு-னு வச்சுக்கிட்டா கூட பெயர் பொருத்தம்தான்) காஃபிக்கடைக்கு கூட்டிட்டு போனேன்.
அங்க போய் ஆளுக்கொரு ஆளுயர கோப்பைல காஃபி சொல்லிட்டு வழக்கம் போல மாமியார்-மாமனார் பண்ற லொள்ளு, என் பொண்ணு படுத்துற பாடு, என் கணவன் பண்ணின அட்டூழியங்கள்னு சொந்தக் கதை சோகக் கதையா சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்ப அவன் சடார்னு ஒரு கருத்த சொல்லிட்டுப் போயிட்டான். இத்தனைக்கும் புலம்பும்போதும் அவங்கள பத்தி உள்ள நல்லதெல்லாம் சொல்லி புலம்பற ஆளுங்க நான்.
ஏண்டான்னு கேட்டா பெரிசா ஒரு விளக்கம் வேற குடுத்தான். அவன் சொல்றதுல உண்மை இருக்கான்னு உங்ககிட்ட கேக்காம வேற யார்ட்ட கேக்றது. நீங்களே சொல்லுங்க 'கல்யாணமான பின்னால ஆண்-பெண் நட்பு விட்டுப் போறதுக்கு இல்ல சின்ன விரிசல் விழறதுக்கு இந்தப் புலம்பலா காரணம்'?
அவன் என்ன விளக்கம் கொடுத்தான்னு கேக்கறீங்களா?
நானும் இதே அட்டூழியங்கள்லாம் என் மனைவிகிட்ட செய்றேன், எங்க வீட்லயும் இதே பிரச்னை பல ரூபங்கள்ல அலைஞ்சுகிட்டு இருக்கு. அதுனால உன் கதைய கேட்டா ஏதோ எந்'தங்கமணி'யே உன்கிட்ட புலம்பி அவருக்கு கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்கன்னு சொல்லி நீ புத்தி சொல்ற மாதிரியே இருக்குன்றான்!
நீங்களே சொல்லுங்க இது நெசமா?
5 மறுமொழிகள்:
நிஜம்தான்பா:)
எல்லாரும் புலம்புவாங்க. சில பேரு புலம்பச் சொல்லி புலம்புவாங்க. :)
/
நானும் இதே அட்டூழியங்கள்லாம் என் மனைவிகிட்ட செய்றேன், எங்க வீட்லயும் இதே பிரச்னை பல ரூபங்கள்ல அலைஞ்சுகிட்டு இருக்கு. அதுனால உன் கதைய கேட்டா ஏதோ எந்'தங்கமணி'யே உன்கிட்ட புலம்பி அவருக்கு கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்கன்னு சொல்லி நீ புத்தி சொல்ற மாதிரியே இருக்குன்றான்!
/
இருக்கும் இருக்கும் அப்பிடித்தான் தோணூது!!!
:)))))))))))
நெசமாவா சொல்றீங்க? !!!!
ஹேய்...சேம் பிளட்!!
நானும் கிட்டதட்ட இதேமாதிரி உணர்ந்திருக்கேன்....சரி..குற்றமுள்ள நெஞ்சு ன்னு நினைச்சுப்பேன்!!
ada neenga rasuvoda frienda....
Post a Comment
<< முகப்பு