முதல் ஆறு
ஆறு விஷயங்களை பகிர்ந்து கொள்ள பாலபாரதி அழைத்திருந்தார். எனக்கு பிடித்தவை என்றால் அது நிச்சயமாக ஆறிலே அடங்காது குறைந்தது ஒரு அறுபதாவது தேறும். அதனால சன் டிவி டாப் டென் மாதிரி டாப் ஆறு விஷயங்களை சொல்லி உங்கள அறுக்க போகிறேன் ரெடியா!!!!
என்னை கவர்ந்த ஆறு சினிமா பாடல் வரிகள்
1.சங்கமம் படத்தில் மழைத்துளி பாட்டில் வரும்
"விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு"
2.பயணங்கள் முடிவதில்லை இளைய நிலா பாடல்
"முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ"
3.திருடா திருடா படத்தில் வரும்
"புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்"
4.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் பாரதியின் வரிகள்
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ"
5.கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் வரும்
"கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே"
முழுப் பாட்டும் பிடிக்கும்
6.மூன்றாம் பிறை படத்தில் வரும்
"கண்ணே கலை மானே "
இது என் மனதில் தோன்ற்ய முதல் ஆறு பாடல் வரிகள்.
மனம் குதூகலிக்க வைக்கும் ஆறு
1.அலைகள் கால்களை வருட,காற்று மென்மையாய் வீச..கடற்கரையில் ஒரு மாலை
2.ஜன்னலோரம் அமர்ந்து உறவினர்களுடனும் நண்பர்களுடனுமான தொலைதூரப் பயணம்
3.மழலைகளுடன் மழையில் விளையாட்டு
4.வெளியே மெலிதாய் மழை பெய்ய ஒரு கையில் புத்தகமும் இளையராஜா இசையும் இன்னொரு கையில் அடம் பிடித்து அம்மா கையால் போட்ட காபி
5.தெரியாத ஒருவருக்கு சின்னதாய் உதவி செய்யும்போது மலரும் அவர்களின் முகம் காணும்போது
6.என்னவருடன் 2 வீலரில் வேகமாய் செல்லும்போது...
கற்றுக்கொள்ள விரும்பும் ஆறு
1.வீணை வாசிக்க :- இது வரை ஆறு முறை வீணை கத்துக்க முயற்சித்தேன். முதல் முறை ஆசிரியை வீடு மாற்றி சென்றுவிட்டார்கள் இரண்டாவது முறை நாங்கள் வீடு மாற்றி சென்றோம், மூன்றாவது முறை வகுப்பையே நிறுத்தி விட்டார்கள்,நாலாவது முறை நான் சிங்கப்பூர் வந்துவிட்டேன், அடுத்த முறை இங்கு ஒருவரிடம் சென்றால் அவருக்கு இந்தியா மாற்றம்,ஆறாவது முறை இப்போது புது வகுப்பு ஆரம்பித்திருக்கிறார்கள் போய் விசாரிக்க வேண்டும்
2.பரத நாட்டியம் :- இல்லை இல்லை இதுக்கு வீணை மாதிரி வரலாறு எல்லாம் இல்லை. ஒரு போது கற்று கொண்டிருந்தேன் ஆனால் பாதியில் நிறுத்தி விட்டேன்
3.தமிழிலும் அங்கிலத்திலும் ஒழுங்காய் எழுத :- நானும் எழுதுகிறேன் பேர்வழி என்று கிறுக்கி கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒழுங்கான அழகான படைப்புக்கள் எழுத ஆசை.
4.ட்ரம்ஸ் ட்ரம்ஸ் :- சமீபத்தில் சிவமணியின் நிகழ்ச்சி பார்த்ததில் இருந்து ட்ரம்ஸ் கற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.நீ சமையல் அறையில் இருந்தாலே ட்ரம்ஸ் வாசிப்பது மாதிரிதான் என என் கணவர் சொல்வது வேறு விஷயம்.
5.சமைக்க - இல்லிங்க நா கொஞ்சம் சுமாரா சமைப்பேன். இருந்தாலும் இன்னுமே நல்லா சமைக்க கத்துகிட்டு நல்ல பேர் வாங்கணும்னு ஆசை
6.டென்னிஸ் - எல்லாம் சானியா மிர்ஸாவ பாத்தததுலேந்து இதுவும் ஒரு ஆசை.இதுல வேற என் கணவருக்கு நல்லாவே ஆடத்தெரியுமா அதனால இப்ப அவருதான் என் கோச்.
எனக்கு பிடித்த பொழுது போக்கு ஆறு
1.அரட்டை - வயது வரம்பை பார்க்காமல் அனைவருடனும் வெட்டியாக அரட்டை அடிப்பதில் உள்ள சுகமே தனி. அதுவும் அது வெட்டியான விஷயமாக இருப்பது is a must
2.சண்டை - என் தங்கையுடன் சண்டை போடுவது என்றால் அது அல்வா சாப்பிடுற மாதிரி அவ்வளவு பிடிக்கும்.
3.ஊர் சுத்துதல் - நன்பர்களுடனும் ,உறவுகளுடனும் ஊர் சுற்றுவது ஜாலீ
4.படிப்பது - இப்பதான் உருப்படியா ஒண்ணு சொல்லி இருக்கேன்னு சொல்றிங்கதானே.
5.இசை - நா பாடினாலும்? பிடிக்கும் மத்தவங்க பாடுறத கேக்கவும் பிடிக்கும் எப்பவும் ஏதாவது ஒரு பாட்டு ஒடிகிட்டே தான் இருக்கும்
6.கிறுக்கல் - இதோ இப்ப எழுதிட்டு இருக்கேனே இந்த வேலையும் ரொம்ம்ம்ப பிடிக்கும் (மத்தவங்களுக்குதானே கஷ்டம்)
ஆறு உணர்ச்சிகள்
1.கோபம் - வயசானவங்கள கஷ்டபடுத்தர யாரைப் பார்த்தாலும் கோவம் பொத்துகிட்டு வரும்
2.சந்தோஷம் - நா சின்ன சின்ன விஷயத்துக்கே ரொம்ப சந்தோஷப்படுவேங்க.இருந்தாலும் இப்ப சமீபத்துல ரொம்ப சந்தோஷப்பட்டது குங்குமம் இதழ்ல கவிதைய பாத்தபோது. கெளதமுக்கு தாங்க்ஸ்
3.வருத்தம் - அப்பா அம்மா தங்கை மாமியார் மாமனார் இவங்கள விட்டுட்டு தூரமா இருக்கோமேன்னு வருத்தம்
4.வெறுப்பு - அய்யோ ஊர்வன எதை பாத்தாலும் நமக்கு வெறுப்புதாங்க
5.சிரிப்பு - இத கேட்டா புரியும் http://raasukutti.blogspot.com/2006/08/blog-post_23.html
6.ஆச்சரியம் - என்னை ஆறு விஷயங்களை சொல்ல பாலா அழைச்சது
அழைக்க விரும்பும் ஆறு பேர்
ஆறு பேருக்கு ஈடான நம் கோகோ
12 மறுமொழிகள்:
///
"முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ"
"புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்"
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ"
///
எனக்கும் இந்தப் பாடல் வரிகள் மிகவும் பிடிக்குங்க. உனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் எல்லாத்தையும் சொல்லுன்னா கண்டிப்பா இந்த வரிகள் அதில் இருக்கும்.
kumaran
Great Minds think alike :)
Nice thoughts
முதலில் பதிவு போட்டமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்.
என்னை கவர்ந்த ஆறு சினிமா பாடல் வரிகள்
1. பாடல் வரிகள் ஓகே!
மனம் குதூகலிக்க வைக்கும் ஆறு
2. என்னவருடன் 2 வீலரில் வேகமாய் செல்லும்போது...
இது தான் பயமா இருக்கு.. :-(
கற்றுக்கொள்ள விரும்பும் ஆறு
3. எதையுமே செய்ய முடியாதுன்னு நெனைக்கிறேன். எதிலும் சுயமான ஆவர்மின்மையே காரணம்.(வீணை வரலாம்)
எனக்கு பிடித்த பொழுது போக்கு ஆறு
4. நீங்க நம்ம சாதி.. இது எல்லாமே பிடிக்கும்..
ஆறு உணர்ச்சிகள்
5.இதுல நான் எங்கம்மா வந்தேன்..?
அழைக்க விரும்பும் ஆறு பேர்
யாருமே இல்லாதது..தான் ஆச்சரியம்
//அதுவும் அது வெட்டியான விஷயமாக இருப்பது is a must//
ம்... அது!
Thanks Bala
//2. என்னவருடன் 2 வீலரில் வேகமாய் செல்லும்போது//
bayappadavee vendam..inga 2 wheeler illave illa :)
//3. எதையுமே செய்ய முடியாதுன்னு நெனைக்கிறேன். எதிலும் சுயமான ஆவர்மின்மையே காரணம்.(//
ayyyayyoo bala except drums meedhi ellathalayum nijamave arvam neraiave irukku.
//ஆறு உணர்ச்சிகள்
5.இதுல நான் எங்கம்மா வந்தேன்..?//
Seriously I am still surprised that you had invited me for sharing this .
//அழைக்க விரும்பும் ஆறு பேர்//
Bala..that character is invented by raasukutti.
so its for raasu. I dunno who all have written this already thats why invited only him. :)
arul
correcta sonninga.
coco
unga annana vittuttu..neenga katchi ellam maralama..thappu illa..
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ"
This is my fav too
adu enna 6
ippadi oru loop poyitu iruka
Nice one
Thank you veda
Post a Comment
<< முகப்பு