நிலா நிலா ஓடி வா

என் செல்லம் இல்ல
என அம்மா கொஞ்ச
எனக்காகடி கண்ணா
என அப்பா கெஞ்ச
பக்கத்து வீட்டு பப்பிக்கு பேச கூட வராது
என என் தாத்தா
என் பேத்தி நா சொன்னாதான் கேக்கும்
என என் பாட்டி
வந்த சுற்றம் என்னை
சுற்றி நின்று கை தட்ட
இப்போதேவா இல்லை இன்னுமொரு
சாக்லெட் கேட்ட பின்னா என்று சிந்தித்தபடி
சிணுங்கலுடன் ஆரம்பித்தேன்
என் குரலில்"நிலா நிலா ஓடி வா"

9 மறுமொழிகள்:

Blogger - யெஸ்.பாலபாரதி said...

அட்டகாசமான கரு!
சிறுகதையாக்கி இருக்கலாம்.
நல்லா வந்திருக்கு..
வாழ்த்துக்கள்!

9:09 PM  

Blogger tamizhppiriyan said...

கவிதை அருமை..வாழ்த்துக்கள்

9:31 PM  

Anonymous Anonymous said...

superrrrrrrrrrrrrrrr

10:20 PM  

Blogger ராசுக்குட்டி said...

நச்...

11:17 PM  

Blogger கோவி.கண்ணன் said...

மழலையின் பேச்சை நன்றாக கவிதையாக வடித்திருக்கிறீர்கள் ... அருமையான கவிதை !

1:11 AM  

Blogger நவீன பாரதி said...

நல்ல கவிதை!
பாராட்டுக்கள்!

6:28 AM  

Blogger கடல்கணேசன் said...

கடைசி வரியில் கலக்கும் வித்தையும், புகைப்படத்தி'லும்' கவிதை சொல்லும் திறமையும்(இதற்கு முன் எழுதிய 'காத்திருக்கிறேன்' போலவே) உங்களுக்கு நன்றாக கை வருகிறது..

6:59 AM  

Blogger கைப்புள்ள said...

இயல்பான நடையில் அழகான ஒரு கவிதை. ரசிக்கும் படி இருக்கின்றது.
வாழ்த்துகள்.

7:27 AM  

Blogger Anu said...

Thanks to all of you for encouraging so much

1:29 AM  

Post a Comment

<< முகப்பு