கொலு வைக்கலையோ கொலு
______________________
நவராத்திரி என்றாலே ஒரு பெரிய சந்தோஷம். ஏன்னு கேக்கரீங்களா? இந்த ஒரு பண்டிகையத்தான் ஒன்பது நாள் கொண்டாடலாம். என் புகுந்த வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் கிடையாது. ஆனாலும் என் பிறந்த வீட்டில் இந்த பழக்கம் உண்டு என்பதால் திருமணத்திற்கு பின்னும் கொலு வைப்பதை நான் நிறுத்தவில்லை. என் மாமியாருக்கும் கொலு வைப்பது பிடித்திருந்ததால் ஒரே கொண்டாட்டம்தான்.

இப்ப நாங்க சிங்கைல இருப்பதாலே விமரிசையா ஒன்பது படி வைக்காட்டியும் இந்த முறை சற்று சிறியதாக வைத்துவிட்டோம்.

சரி அது இருக்கட்டும் இந்த கொலு வைக்கற சாக்கில் வீட்ல ஒரு களேபரம் நடக்கும் பாருங்க...அத பத்திதான் அடுத்து எழுதப்போரேன்.


இப்போதைக்கு அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்

3 மறுமொழிகள்:

Blogger துளசி கோபால் said...

விழாக்கால வாழ்த்து(க்)கள்.

10:29 PM  

Anonymous Anonymous said...

Hello Pavanitha,

Nice posts in all the blogs you write.

Why dont you give us access to read your rest of the blogs?

Or atleast me. My email is spotsusan@gmail.com

Waiting to get an invite from you.

Bye
Susan

6:19 AM  

Blogger Sanjai Gandhi said...

//இப்ப நாங்க சிங்கைல இருப்பதாலே விமரிசையா ஒன்பது படி வைக்காட்டியும் இந்த முறை சற்று சிறியதாக வைத்துவிட்டோம்.//

என்னது படியையா? கொலுவையா? :))

நெக்ஸ்டு மீட் பண்ணலாம்.. வர்ட்டா.. :)

1:12 AM  

Post a Comment

<< முகப்பு