கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா.

அப்பா எல்லாருகிட்டயும் என் காலேஜ்ல வண்டி இருக்கு. எனக்கு மட்டும்தான் இல்ல..இப்ப ஃபைனல் இயர் கூட வந்தாச்சு. ப்ளீஸ் பா புரிஞ்சுகோங்க.அக்கா கல்யாணம் கூட முடிஞ்சு போச்சு இல்ல.
டேய் ராஜா ஏன் கோவப்படர...இந்த தடவ உன் பொறந்த நாளுக்கு கண்டிப்பா உனக்கு பைக் வாங்கிதறேன்டா. என்ன நம்புடா.
ஆமாம் போன தடவுயும் இதத்தான் சொன்னீங்க்க..
டேய் அப்ப உன் அக்கா கலயாணம் திடிர்னு முடிவாச்சு இல்ல.
சரிப்பா இந்த தடவ மட்டும் என்னை ஏமாத்திடாதீங்க.
-*-*-
ஏங்க உங்களுக்கு அறிவு கிறிவு மழுங்கிடுச்சா என்ன. பொண்ணு கலயாண கடனே திணறிகிட்டு இருக்கோம். இதுல இவனுக்கு எங்கேந்து வண்டி வாங்க போறீங்க.
லட்சுமி இத பாரு இன்னும் ஒரு வருஷம்டி...அப்புறம் அவனுக்கு வேலை கிடச்சுடும். அதுக்கு அப்பறம் அவன் அப்பா இத வாங்கித்தான்னு என்னை எதுவுமே கேக்க மாட்டான்டி. அவன் ஆசை பட்டு கேக்கறத வாங்கி தர இதான்டி கடைசி சந்தர்ப்பம் எனக்கு.
புரியுதுங்க..ஆனா பணத்துக்கு என்ன பண்ண போறிங்க..
வி.ஆர்.ஸ் குடுக்கலாம்னு இருக்கேன்டி.அதுல வர்ர பணத்துல நம்ம பொண்ணு கல்யாண கடனையும் அடைக்கலாம் அப்படியே பையனுக்கு வண்டியும் வாங்கலாம்.
என்னங்க இது யாராவது வண்டி வாங்க வி.ஆர்.ஸ் குடுப்பாங்களா.
ஒண்ணும் பெரிய நஷ்டம் இல்லடி. மாச மாசம் 6000 பென்ஷன் வரதுக்கு பதிலா 3000 வரும்.நமக்கு அது போதாதா..பையன் படிப்பு செலவு இந்த வருஷம் மட்டும்தானே அதுக்கு வி.ஆர்.ஸ்ல வர பணம் சரியா இருக்கும். நீ கவலைப்படாம நா சொல்ரத கேளு.
-*-*-*-
டேய் ராஜ்,இந்த வருஷம் உனக்கு ரொம்ப ராசிடா. புது வண்டி அப்புறம் இப்ப கேம்பஸ் இன்டர்வியுல நல்ல வேலை. நடத்துடா.
சரிடா..இன்னும் ஒரு வாரம்தான். அப்புறம் காலேஜ் லைஃப் முடிஞ்சுடும். அதான் கவலையா இருக்குடா.இனிமே நாம எல்லாரும் முன்ன மாதிரி வண்டி எடுத்து சுத்துவோமா இல்ல ஆபிஸ் வீடு கல்யாண்ம்னு இருந்திடுவோமோ.
டேய் இத பத்தி எல்லாம் நீதான் கவலைப்படணும். நாங்க வேலை கிடைக்கிரத பத்தின கவலைல இருப்போம்.
-*-*-
ராஜ்..எனக்கு கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா...ம்ம்ம்..கொஞ்சம் கோவில் வரைக்கும் விட்டுட்டு போறியா.
அப்பா..நீங்க வீட்ல சும்மாதானே இருக்கீங்க. எனக்கு நிறைய வேல இருக்கு. நா கெளம்பறேன்.
சரிப்பா நீ போ. அதை கேக்கும் வரை கூட அவன் காத்திருக்கவில்லை.
என்னங்க இது.அவனுக்காக நீங்க வேலைய கூட விட்டீங்க. ஆனா..அவன்..உங்க பொறந்த நாள் கூட ஞாபகம் இல்லாம..
லட்சுமி...எனக்கு பொறந்த நாள் கொண்டாடர வயசாடி..அவன் பாவம்..என்ன ஆபிஸ் டென்ஷன்ல இருக்கானோ..அவன் என் பையன்டி
சரிங்க..எனக்கு மனசே கேக்கல. உங்களுக்கு பிடிச்ச பாயசம் செஞ்சிருக்கேன் வந்து சாப்பிடுங்கநாம சாயந்தரமா கோவிலுக்கு போலாம்
-*-*-*
என்ன லட்சுமி விளக்கு எதுவும் போடாம வந்திட்டியா. வீடே இருட்டா இருக்கு.
இல்லீங்க போட்டுதானே வந்தேன்..கர்ன்ட் போயிருக்குமோ என்னவோ.
கதவு திறந்ததும்..
அட..லட்சுமி இவங்க எல்லாரும் என்னோட அபீஸ்ல வேலை பாக்கறவங்க. அட..எனக்கு..வார்த்தையே வரல...சந்தோஷத்துல...சார் நீங்க கூட வந்திருக்கீங்க்களா..
ஆமாம் மூர்த்தி...நீ வி.ஆர்.ஸ் குடுக்காம இருந்திருந்தனா இன்னிகுதான் ரிடையர் ஆகி இருப்ப.அதனால் இது உன் பிறந்த நாள் மட்டும் இல்ல அப்ப செய்யாத பிரிவு உபசார விழாவும் இன்னிக்குதான். எங்கப்பா..அந்த மாலை..அத கொண்டுவாங்க...
சார்...நா உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்லபோறேன்...
இருங்க..நன்றி எங்களுக்கு இல்ல..இத எல்லாம் ஏற்பாடு செஞ்ச உங்க ராஜ்க்குதான் சொல்லணும்..
யாரு..என் பையனா...
ஆமாம்பா...போன வருஷம் என் பொறந்த நாளுக்கு...நீங்க பரிசு குடுத்தீங்க இந்த வருஷம் நான்.அப்பா வாசல்ல கார் பாத்தீங்களா..இனிமே நீங்க எங்க போனாலும்..அதுலதான் போகணும்.
இதையெல்லாம் அமைதியாய் பார்த்து புன்னகைத்த லட்சுமிக்கு ஒரே பெருமை.
அப்பா...எனக்கு லிஃப்ட் தருவீங்களா....
சிரித்தபடி கேட்டான் ராஜ்.