கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா.

Photobucket - Video and Image Hosting
அப்பா எல்லாருகிட்டயும் என் காலேஜ்ல வண்டி இருக்கு. எனக்கு மட்டும்தான் இல்ல..இப்ப ஃபைனல் இயர் கூட வந்தாச்சு. ப்ளீஸ் பா புரிஞ்சுகோங்க.அக்கா கல்யாணம் கூட முடிஞ்சு போச்சு இல்ல.

டேய் ராஜா ஏன் கோவப்படர...இந்த தடவ உன் பொறந்த நாளுக்கு கண்டிப்பா உனக்கு பைக் வாங்கிதறேன்டா. என்ன நம்புடா.

ஆமாம் போன தடவுயும் இதத்தான் சொன்னீங்க்க..

டேய் அப்ப உன் அக்கா கலயாணம் திடிர்னு முடிவாச்சு இல்ல.

சரிப்பா இந்த தடவ மட்டும் என்னை ஏமாத்திடாதீங்க.

-*-*-
ஏங்க உங்களுக்கு அறிவு கிறிவு மழுங்கிடுச்சா என்ன. பொண்ணு கலயாண கடனே திணறிகிட்டு இருக்கோம். இதுல இவனுக்கு எங்கேந்து வண்டி வாங்க போறீங்க.

லட்சுமி இத பாரு இன்னும் ஒரு வருஷம்டி...அப்புறம் அவனுக்கு வேலை கிடச்சுடும். அதுக்கு அப்பறம் அவன் அப்பா இத வாங்கித்தான்னு என்னை எதுவுமே கேக்க மாட்டான்டி. அவன் ஆசை பட்டு கேக்கறத வாங்கி தர இதான்டி கடைசி சந்தர்ப்பம் எனக்கு.

புரியுதுங்க..ஆனா பணத்துக்கு என்ன பண்ண போறிங்க..

வி.ஆர்.ஸ் குடுக்கலாம்னு இருக்கேன்டி.அதுல வர்ர பணத்துல நம்ம பொண்ணு கல்யாண கடனையும் அடைக்கலாம் அப்படியே பையனுக்கு வண்டியும் வாங்கலாம்.

என்னங்க இது யாராவது வண்டி வாங்க வி.ஆர்.ஸ் குடுப்பாங்களா.

ஒண்ணும் பெரிய நஷ்டம் இல்லடி. மாச மாசம் 6000 பென்ஷன் வரதுக்கு பதிலா 3000 வரும்.நமக்கு அது போதாதா..பையன் படிப்பு செலவு இந்த வருஷம் மட்டும்தானே அதுக்கு வி.ஆர்.ஸ்ல வர பணம் சரியா இருக்கும். நீ கவலைப்படாம நா சொல்ரத கேளு.
-*-*-*-
டேய் ராஜ்,இந்த வருஷம் உனக்கு ரொம்ப ராசிடா. புது வண்டி அப்புறம் இப்ப கேம்பஸ் இன்டர்வியுல நல்ல வேலை. நடத்துடா.

சரிடா..இன்னும் ஒரு வாரம்தான். அப்புறம் காலேஜ் லைஃப் முடிஞ்சுடும். அதான் கவலையா இருக்குடா.இனிமே நாம எல்லாரும் முன்ன மாதிரி வண்டி எடுத்து சுத்துவோமா இல்ல ஆபிஸ் வீடு கல்யாண்ம்னு இருந்திடுவோமோ.

டேய் இத பத்தி எல்லாம் நீதான் கவலைப்படணும். நாங்க வேலை கிடைக்கிரத பத்தின கவலைல இருப்போம்.
-*-*-
ராஜ்..எனக்கு கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா...ம்ம்ம்..கொஞ்சம் கோவில் வரைக்கும் விட்டுட்டு போறியா.

அப்பா..நீங்க வீட்ல சும்மாதானே இருக்கீங்க. எனக்கு நிறைய வேல இருக்கு. நா கெளம்பறேன்.

சரிப்பா நீ போ. அதை கேக்கும் வரை கூட அவன் காத்திருக்கவில்லை.

என்னங்க இது.அவனுக்காக நீங்க வேலைய கூட விட்டீங்க. ஆனா..அவன்..உங்க பொறந்த நாள் கூட ஞாபகம் இல்லாம..

லட்சுமி...எனக்கு பொறந்த நாள் கொண்டாடர வயசாடி..அவன் பாவம்..என்ன ஆபிஸ் டென்ஷன்ல இருக்கானோ..அவன் என் பையன்டி

சரிங்க..எனக்கு மனசே கேக்கல. உங்களுக்கு பிடிச்ச பாயசம் செஞ்சிருக்கேன் வந்து சாப்பிடுங்கநாம சாயந்தரமா கோவிலுக்கு போலாம்

-*-*-*
என்ன லட்சுமி விளக்கு எதுவும் போடாம வந்திட்டியா. வீடே இருட்டா இருக்கு.

இல்லீங்க போட்டுதானே வந்தேன்..கர்ன்ட் போயிருக்குமோ என்னவோ.

கதவு திறந்ததும்..

அட..லட்சுமி இவங்க எல்லாரும் என்னோட அபீஸ்ல வேலை பாக்கறவங்க. அட..எனக்கு..வார்த்தையே வரல...சந்தோஷத்துல...சார் நீங்க கூட வந்திருக்கீங்க்களா..

ஆமாம் மூர்த்தி...நீ வி.ஆர்.ஸ் குடுக்காம இருந்திருந்தனா இன்னிகுதான் ரிடையர் ஆகி இருப்ப.அதனால் இது உன் பிறந்த நாள் மட்டும் இல்ல அப்ப செய்யாத பிரிவு உபசார விழாவும் இன்னிக்குதான். எங்கப்பா..அந்த மாலை..அத கொண்டுவாங்க...

சார்...நா உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்லபோறேன்...

இருங்க..நன்றி எங்களுக்கு இல்ல..இத எல்லாம் ஏற்பாடு செஞ்ச உங்க ராஜ்க்குதான் சொல்லணும்..

யாரு..என் பையனா...

ஆமாம்பா...போன வருஷம் என் பொறந்த நாளுக்கு...நீங்க பரிசு குடுத்தீங்க இந்த வருஷம் நான்.அப்பா வாசல்ல கார் பாத்தீங்களா..இனிமே நீங்க எங்க போனாலும்..அதுலதான் போகணும்.

இதையெல்லாம் அமைதியாய் பார்த்து புன்னகைத்த லட்சுமிக்கு ஒரே பெருமை.

அப்பா...எனக்கு லிஃப்ட் தருவீங்களா....

சிரித்தபடி கேட்டான் ராஜ்.

24 மறுமொழிகள்:

Blogger Unknown said...

குமுதம் பாணியிலே கதையா? கலக்குறீஙக வெற்றி பெற வாழ்த்துக்கள்

11:03 PM  

Blogger Anu said...

Dev
kalasittinga..

11:07 PM  

Blogger ராசுக்குட்டி said...

wow! Very good story!

kalakkals and vetri pera vaalthukkal!

11:11 PM  

Blogger Anu said...

Thanks Raj
Corrected the mistake

11:15 PM  

Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா இருக்குங்க கதை, கற்பனை ரெண்டும் நடையை மட்டும் கொஞ்சம் இம்புரூவ் பண்ண முயற்சி செய்யுங்க.

11:21 PM  

Blogger துளசி கோபால் said...

கதை நல்லா 'நீட்'டா வந்துருக்குங்க.

வாழ்த்து(க்)கள்

11:36 PM  

Blogger கோழை said...

superb man i'm gonna vote 4 u i'm joking i am serious.....

11:42 PM  

Blogger ILA (a) இளா said...

தந்தைக்கு மகனாற்றும் உதவி.
நல்ல கதை, அருமையான நடை. போட்டிக்கான வாழ்த்துக்கள்

12:16 AM  

Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
அருமையான நடை
///

:-((((
இளா இப்படி சொல்லீருக்கார் நான் தான் தப்பா சொல்லீட்டேனோ?

3:18 AM  

Blogger Anu said...

kumaran,thulasi,ila
Thanks for the encouragement.
aadhavan..
enna solla varinga..#$#@$#@$
kumaran
Each one has different perspective
so idula tappu right eduvume illa.
infact idu avasara avasarama ezhudina kadai..so even i felt its nto upto the mark

3:24 AM  

Blogger  வல்லிசிம்ஹன் said...

anitha, it is a very touching real life story.
sons are like that and their fathers deserve it too.
good thoughts breed good deeds.
thank you. and wishes for winning/.

6:40 AM  

Blogger நெல்லை சிவா said...

சொன்னா மாதிரியே உடனேயே, கதை எழுதீட்டீங்களே..நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

நானும் கூட எழுதியிருக்கேன். படிச்சுட்டு சொல்லுங்க.

7:24 AM  

Blogger நாமக்கல் சிபி said...

:: Do not Publish ::
அருமையான கதை!!!

ஏதோ மிஸ்ஸாகற மாதிரி இருக்கு!!! ஒரு வேளை அம்மா கேரக்டர் சரியா வடிவமைக்கப்படவில்லைனு நினைக்கிறேன். எந்த அம்மாவும் பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டாங்க! அப்பாவுக்கு பிறந்த நாள்னா மகனுக்கு சொல்லாம விட்டுடுவாங்களா? இல்ல பாயசம்தான் பையனுக்கு தராம விட்டுடுவாங்களா?

எங்க வீட்ல எந்த விசேஷம்னாலும் ஸ்வீட் முதல்ல எனக்குதான் எங்க அம்மா தருவாங்க...

கதைல ரெண்டு கேரக்டருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துருக்கீங்க!!! கதையோட கரு நல்லா இருக்குங்க!

வெற்றி பெற வாழ்த்துக்கள்

7:25 AM  

Anonymous Anonymous said...

a nice story... really i cheked whether i am reading blog or Ananda vikatan,,

gud one

7:31 PM  

Blogger MSV Muthu said...

சிம்பிள் அன்ட் சூப்பர். குமுதத்திற்கு அனுப்புங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

11:35 PM  

Blogger Anu said...

Thanks
Valli siva and muthu
Thank you for the encouragement

1:32 AM  

Blogger ராம்குமார் அமுதன் said...

அப்பா மகன் உறவை நல்லா படம்பிடிச்சு காட்டிருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்..

12:16 PM  

Blogger கதிர் said...

சந்தோஷமா இருந்தது படித்து முடித்ததும்.

அருமை!!!

1:43 PM  

Blogger முரட்டுக்காளை said...

அனிதா, கதை அருமையா வந்திருக்கு.

வண்டி வாங்கித்தரும் பாசமான அப்பா, அவரை மகிழ்விக்க வித்தியாசமான பிறந்த நாள் பரிசு கொடுக்கும் பிள்ளை. சூப்பர் தான்.

வெற்றி பெற வாழ்த்துகிறேன் !!

அப்படியே ஒரு வரியில இந்தக் கதையப்பற்றி நான் சொன்னது இங்கே பாருங்க

நீங்க "-*-*-" போட்ட இடத்தில கற்பனையா ஒரு தேதி இல்லைனா நேரம் போட்டிருந்தா நல்லா இருந்திருக்குங்கிறது நம்ம தனிப்பட்ட கருத்து அனிதா.. சரியா?

2:10 AM  

Anonymous Anonymous said...

நல்ல கதைங்க!!

8:08 PM  

Anonymous Anonymous said...

Nalla kathai, keep it up

6:08 AM  

Blogger மனசு... said...

அருமைங்க... ரெம்ப நல்லா எழுதிருக்கீங்க... வாழ்த்துக்கள்...

5:16 AM  

Blogger Raghavan alias Saravanan M said...

படிச்சு முடிச்சதும் மனசு கனத்துப் போச்சுங்க...

கெளதம் பாணியில் இருக்கு உங்க கதை.. படிக்கறப்பவே ரெண்டு மாதிரியான முடிவு மனசுக்குள்ள வந்து உக்காந்துருச்சு..

ஒன்னு சொல்லுது.. அவன் அப்பாவையும் அவரோட தியாகங்களையும் மறந்துருவான்.. ஆனாலும் அப்பா தன்னோட பிள்ளைக்காக கடைசிவரைக்கும் நல்ல அப்பாவாவே இருப்பாருன்னு..

இன்னொரு மனசு சொல்லுது.. இல்ல பையன் அப்பாவுக்கு நல்லவிதமா உதவி பண்ணுவான் அவங்களை சந்தோஷமா வச்சிருந்து நல்ல பிள்ளைன்னு பேரெடுப்பான்னு....

சுபமுடிவு உங்க கதையில... கலக்கல்ங்க.. சபாஷ்!!

நல்ல உணர்ச்சிபூர்வமான கதைங்க.. மற்ற வாசகர்கள் சொன்ன மாதிரி குமுதத்துக்கு அனுப்பிச்சீங்களா? பரிசு கிடைச்சுதா?

தொடர்ந்து எழுதுங்க..
வாழ்த்துக்கள்...

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

5:23 AM  

Blogger மங்களூர் சிவா said...

//
ஆமாம்பா...போன வருஷம் என் பொறந்த நாளுக்கு...நீங்க பரிசு குடுத்தீங்க இந்த வருஷம் நான்.அப்பா வாசல்ல கார் பாத்தீங்களா..இனிமே நீங்க எங்க போனாலும்..அதுலதான் போகணும்.
//

அவ்வ்வ்வ்

புல்லரிக்க்குதுங்கோ

9:04 PM  

Post a Comment

<< முகப்பு