டாட்டா பைபை

Photobucket - Video and Image Hosting
என் சின்ன வயதில் எங்கள் வீடு இரயில்வே ட்ராக் பக்கம் இருந்தது.அப்போது தினமும் ஒவ்வொரு ரயில் போகும்போதும் வரும்போதும் நானும் என் தங்கையும் சலிக்காமல் டாட்டா காண்பிப்போம்.யாராவது பதிலுக்கு டாட்டா சொல்வார்களா என ஏங்கியிருக்கிறோம்.கடைசியில் யாரும் டாட்டா சொல்லவில்லை நாங்கள்தான் வீடு மாற்றிவிட்டோம். அந்த ஏமாற்றத்தால் ஒரு சபதம் எடுத்தேன். நான் ரயில் வண்டியில் போகும்போது எந்த குழந்தையாவது டாட்டா காண்பித்தால் நானும் டாட்டா சொல்ல வேண்டும் என்பதுதான் அது.அதுக்கு ஏத்தாப்பல நான் முதல் முதல் வேலைக்கு சேர்ந்த கம்பெனிக்கு மாம்பலத்துலேந்து தாம்பரம் வரை தினமும் ரயில் பயணம். எப்படியாவது ஜன்னல் பக்கம் இடத்தை பிடித்துவிடுவேன். எல்லாம் என் சபதத்தை நிறைவேத்ததான். ஆனால் என் சபதம் நிறைவேர முடியாதபடி எந்த பாப்பாவும் என் கண்ணில் படவில்லை. இனிமேல் ரயில் பயணமே வேண்டாம் என நான் முடிவு செய்த போது ரயில் சேனிடோரியம் நெருங்கியது அட அப்போதுதான் அந்த அதிசயம்.ஒரு வீட்டு வாசலில் குழந்தைக்கு ரயிலை காண்பித்தபடி ஊட்டி கொண்டு இருக்கும் ஒரு தாய் அந்த குழந்தை டாட்டா காண்பித்தது. அவ்வளவுதான் என் கையில் இருந்த எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு முதல் வேலையாய் டாட்டா காண்பித்தேன். ஒரே சந்தோஷம். ஒரு குழந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேத்திட்டேன் என்று பெருமை வேற.இப்படி தினமும் என் டாட்டா பயணம் ரயிலில் தொடர்ந்தது. முதலில் என்னை வித்தியாசமாக பார்த்தவர்கள் கூட என்னுடன் சேர்ந்து அந்த குழந்தைக்கு டாட்டா காண்பிக்க ஆரம்பித்தார்கள்.சரி இதுக்கு என்ன இப்பனு கேக்கறீங்களா வேற ஒண்ணும் இல்லை இங்க சிங்கப்பூர்ல ரயில்ல போகும்போது இந்த மாதிரி டாட்டா வாய்ப்பே இல்லைங்க.அதனால் என்னோட சேவையை!!!!! :) தொடர முடியலையேனு ஒரு வருத்தம். ஆனா இன்னிக்கு ஒரு இந்திய குழந்தை பஸ்ஸ பாத்து டாட்டா சொல்லவும் சந்தோஷம் தாங்காம நானும் டாட்டா சொல்ல பின்னாடி ஒரு குரல்...ஏங்க உங்களுக்கு என் குழந்தையை தெரியுமானு. அப்பதான் புரிஞ்சுது அந்த குழந்தை டாட்டா காண்பித்தது அதோட அம்மாவுக்குனு.ம்ம்ம்ம்ம்.....அதுக்குத்தான் மலரும் நினைவா இந்த பதிவு. சரிங்க....
இப்போதைக்கு
டாட்டா..பை பை..

33 மறுமொழிகள்:

Blogger கைப்புள்ள said...

இதே மாதிரி நானும் என் தம்பியும் ஏரோப்ளேனுக்கு டாட்டா காட்டுவோம். அது என்னமோ அந்த வயசுல ஒரு அல்ப ஆசை.

என் தம்பி கூடுதலா எதிர்வீட்டு பைக் மாமாவுக்கு அவர் பைக்கைக் கிளப்பிக் கொண்டு எங்காவது வெளியில் செல்லும் போதெல்லாம் ஓடிப் போய் டாட்டா சொல்லுவான். அவரும் அவன் டாட்டா சொல்லுவதற்காக பைக்கை நிறுத்தி காத்திருந்து விட்டுத் தான் செல்வார்.

நல்ல சுகமான மலரும் நினைவுகள். நன்றாக இருந்தது.

12:19 AM  

Blogger வடுவூர் குமார் said...

இந்த "பை பை" பற்றி பல வருடங்களுக்கு முன்பு குமுததிலிலோ ஆனந்தவிகடனில் ஒரு கதை போட்டார்கள்.கதையின் சாரமும் நீங்கள் சொன்னதும் ஒன்றே!
அது அப்படியே ஞாபகம் வந்தது.

12:22 AM  

Blogger வரவனையான் said...

தூங்கி கிடந்த பழைய நினைவுகளை விடைபெறுதலின் அங்க அசைப்பு மொழியால் விழித்தெழ வைத்துவிட்டீர்கள். இது போன்ற நுன்னிய உணர்வுகள் வாழ்வின் சுவையைக்கூட்டுமென்பது திண்ணம்

12:34 AM  

Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்க மலரும் நினைவுகள் ரசிக்கும் படியா இருக்குங்க.

12:51 AM  

Blogger ரவி said...

டாட்ட்ட்ட்ட்டா போயிட்ட்டீங்க போங்க.

1:57 AM  

Blogger ரவி said...

ஆட்டோவுக்கு ஆட்டோன்னு பேரு இருந்தாலும் மேனுவலாத்தான் டிரைவ் செய்ய முடியும் இல்லையா..அதனால் எம்.ஆர்.டி யில ட்டாட்டவுக்கு குழந்தை தேடுறதை விடுங்க...

டாட்டாவே வந்தாலும் டாட்டா காட்டாதீங்க...

1:58 AM  

Blogger கார்த்திக் பிரபு said...

nalla padhivu...valthukkal

5:06 AM  

Blogger Boston Bala said...

டாட்டா..பை பை..

11:16 AM  

Blogger Anu said...

kaippulla..
ippavum kooda aeroplaneku tata kamikkaradha niruthhala..
kumar..
oh..vikatan rangeku na ezhudarannu solringadane :)
Thanks..senthil ,kumaran and karthick.
Ravi
டாட்டாவே வந்தாலும் டாட்டா காட்டாதீங்க...
mmm...ha ha.
bala
chummadane tata sonninga
bloga vittellam poga sollaliye ;)

7:24 PM  

Blogger ILA (a) இளா said...

அடடா ஒரு சின்ன விஷ்யம் ஆனால் ஆழமான ஒரு எதிர்ப்பார்ப்பு. நல்லா சொல்லி இருக்கீங்க. இந்த மாதிரி சின்ன விஷ்யத்தையெல்லாம் சந்தோசமா நாமும் செஞ்சா மனிதம் எவ்வளவு நல்லா இருக்கும்.

//என் தம்பி கூடுதலா எதிர்வீட்டு பைக் மாமாவுக்கு அவர் பைக்கைக் கிளப்பிக் கொண்டு எங்காவது வெளியில் செல்லும் போதெல்லாம் ஓடிப் போய் டாட்டா சொல்லுவான்//

கைப்பு, அப்படியே நாள் ஆக ஆக மாமா பொண்ணுக்கும் சேர்த்து காட்டி, அப்புறமா அவர் உங்க ரெண்டு பேருக்கும் காட்டு காட்டுன்னு காட்டினாரே அத சொல்லவே இல்லை..

9:07 PM  

Blogger Anu said...

Thanks ila
kaipulla...sollave illa...;)

9:09 PM  

Blogger  வல்லிசிம்ஹன் said...

அனிதா எல்லோருக்கும் பயணம் சொல்பவரைப் பார்த்தால் சந்தோஷம்.வெகு உண்மையான மனசைத்தொடும் பதிவு.

ரயிலையோ,ஜன்னல் ஓரத்தையோ, காட்டுவெளிகளில் வெய்யிலில் நின்று
கைகாட்டும் அறியாச்சிறுவர்களுக்கு பதில் கையசைப்பு அவசியம்

9:10 PM  

Anonymous Anonymous said...

Thanks , Happy to know there are many friends to repond me :)

9:47 PM  

Blogger கைப்புள்ள said...

//kaippulla..
ippavum kooda aeroplaneku tata kamikkaradha niruthhala..//

நிறுத்தலியான்னு என்னை கேக்கறீங்களா? இல்லை நீங்க இன்னும் நிறுத்தலைன்னு சொல்ல வர்றீங்களா?
:)

//Thanks ila
kaipulla...sollave illa...;)//
அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க. மாமாவுக்கும்-ஆண்ட்டிக்கும் குழந்தை இல்லை. நாங்க இவ்வளவு பெரிய பசங்க ஆனதுக்கப்புறமும், வெவ்வேறு இடத்துக்குப் போனதுக்கப்புறமும் எப்பவாச்சும் சென்னைக்குப் போகும் போது போன் பண்ணிப் பேசினாப் பிரியமா விசாரிப்பாங்க. செந்தில் அவர்கள் சொன்னது போல "இது போன்ற நுன்னிய உணர்வுகள் வாழ்வின் சுவையைக்கூட்டுமென்பது திண்ணம்". அதனால தான் உங்கப் பதிவைப் படிச்சதும் பழைய நியாபகம் எல்லாம் வந்தது.

9:48 PM  

Blogger Boston Bala said...

மனதில் அசை போட்டு தொட்ட பதிவு என்று எழுதினால், போலித்தனம் வந்துவிடுமோ என்று நினைத்து, கொஞ்சம் ஜாலியா 'டா டா...' காண்பித்தேன்.

பகிர்வுக்கு நன்றி :-)

10:23 PM  

Blogger Anu said...

Thanks bala and valli
kaippulla..
nanga tata kamikkaradha niruthalanu..sonnen
btw..ur clarifications.accepted :)

11:35 PM  

Blogger Kowsalya Subramanian said...

நல்ல பதிவு அனிதா. இங்க அப்பிடியே ரிவர்ஸ். நான் ரயிலில் போகும் போது டாட்டா காட்டிண்டே போவே[றே]ன். :)

12:16 AM  

Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

தூரத்துச் சிறுவர்களுக்கு
கைகாட்டும் இரயில் பயணிகளைப்போலவே

என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டு இருந்தேன். அந்த அளவிற்கு எல்லாருடைய மனதிலும் சலனம் ஏற்படுத்தும் நிகழ்வு அது.
ஏதோ ஒரு பயணத்தில் எங்கோ யாருக்கோ டாட்டா காட்டிச் செல்வது இனிமையான செய்கை அனிதா..

( பார்த்துங்க புள்ள புடிக்கறவங்கன்னு தப்பா நினைச்சுக்கப்போறாங்க)

12:41 AM  

Blogger Anu said...

Thanks nilavu nanban

( பார்த்துங்க புள்ள புடிக்கறவங்கன்னு தப்பா நினைச்சுக்கப்போறாங்க)
andha madiridan nenachutanga singaporela :(

12:53 AM  

Anonymous Anonymous said...

அனிதா,
நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த பதிவு. Simple and Nice.
என்னுடைய படித்தேன் ரசித்தேன் பகுதியில் சேர்த்துவிட்டேன்.
தேசிகன்

1:18 AM  

Blogger Anu said...

Thanks desikan
vashistar vayala brahma rishi madiri irukku :)

1:34 AM  

Blogger நெல்லை சிவா said...

சூப்பருங்க..நீங்க ஏன் தேன்கூடு போட்டியில பங்கெடுக்க கூடாது?

8:49 PM  

Blogger துளசி கோபால் said...

அனிதா,

பதிவுக்குப் போட்ட படம் சூப்பர்.

இந்த 'டாட்டா' காமிக்கும் பழக்கம் எனக்கு இன்னும் போகலை.

போன மாசம் ரயில் பயணத்தில் பாக்கறவங்களுக்கெல்லாம் ஒரே
டாடா'தான்.

ஒரு காலத்துலே ச்சென்னையிலே மின்சார ரயில் பயணத்துலே
எதிர் ப்ளாட்பாரம் வண்டி கிளம்பி ஸ்பீடு எடுக்கும்போது யாராவது ஒரு இளைஞனுக்குக்
கை ஆட்டிட்டுப் போறதுதான். யாரா இருக்குமுன்னு யோசிச்சு அவர் மண்டையைப்
பிச்சிக்கட்டுமுன்ற ஒரு நல்லெண்ணம்தான்:-))))))

4:23 PM  

Blogger Anu said...

Thanks Ravi
Thulasi
//ஒரு காலத்துலே ச்சென்னையிலே மின்சார ரயில் பயணத்துலே
எதிர் ப்ளாட்பாரம் வண்டி கிளம்பி ஸ்பீடு எடுக்கும்போது யாராவது ஒரு இளைஞனுக்குக்
கை ஆட்டிட்டுப் போறதுதான். யாரா இருக்குமுன்னு யோசிச்சு அவர் மண்டையைப்
பிச்சிக்கட்டுமுன்ற ஒரு நல்லெண்ணம்தான்//
too much kalasal..:)

7:12 PM  

Blogger Unknown said...

ரயில் பயணத்தில் சிறுவர்களுக்கு டாட்டா சொல்லுவது மாதிரியான சின்ன சின்ன சந்தோசங்கள் இல்லையென்றால் வாழ்க்கையும் வெறுமையாய்த் தான் தோன்றும்...

சின்ன விஷயம் தான் என்றாலும் நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க!!!

2:02 AM  

Blogger G Gowtham said...

அனிதா,
மலர்ந்த நினைவுகள் அழகு!
படமும் அந்த கமெண்ட்டும் அழகோ அழகு!

10:41 PM  

Blogger Unknown said...

அனிதா,

உண்மையிலே இது ஒரு நல்ல விஷ்யம். முக்கியமாச் சென்னை ஸ்கூல் பஸ், வேன், ரிக்ஷாவுல்ல போற சிறுசுகளுக்கு இப்படி டைம் கிடைக்கும் போது டாட்டா காட்டுறது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமான விஷ்யம். ரசிக்க வைத்த பதிவு.

11:00 PM  

Anonymous Anonymous said...

Nalla nadai, photovum taan

6:02 AM  

Blogger மிதக்கும்வெளி said...

kulantahikkum maddum kattinal paravayillai. kulanthaiyoda ammavukku kattamal irukkanum

1:12 AM  

Anonymous Anonymous said...

இங்கே இலங்கையிலிருந்து எழுதுகிறேன். நானும் வேலைக்குப் போய்வரும் வழியில் ஒரு வலது குறைந்தோர் விடுதியுள்ளது. பகல் 1.30 அளவில் தங்களது சர்க்கர நாற்காலிகளில் அமர்ந்தபடி விடுதி வேலியோரம் உள்ள அரசமர நிழலில் கால் ஊனமுற்ற 7,8 பேர் - வயதானவர்கள்- எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பார்கள்.பள்ளி முடிந்து வண்டிகளில் வீடு திரும்பும் மாணவர்கள் இவர்களூக்கு மறக்காமல் டாட்டா காட்டிவிட்டே செல்வார்கள். இதைக் கண்ட நானும் ... அந்த மதிய வேளையில் இவர்களைக் கடக்க நேர்ந்தால் ... டாட்டாதான்

2:25 AM  

Blogger நாமக்கல் சிபி said...

எனக்கும் குழந்தைகளுக்கு டாட்டா காட்டுவது பிடிக்கும். ஆனால் இப்போது குறைத்துக் கொண்டேன்!

9:32 PM  

Blogger Adiya said...

same pinch.. :) super aa.

8:58 AM  

Blogger Kumky said...

நான் கூட ஏரோப்ளேன்ள போற புன்னியவானுக்கெல்லாம் கை கால் எல்லாம் காட்றேன்.. ஆனா ஒரு பயலுவலும் பதிலுக்கு காட்டமாட்டேங்கறான்.

4:12 AM  

Post a Comment

<< முகப்பு