முதல் முதலாய்...

முதல் முதலாய்...(1)
Photobucket - Video and Image Hosting

இது கண்டிப்பா லேசா லேசா பாட்டு இல்லீங்க.
முதல் முதலாய் நிகழும் சில அனுபவங்கள் மறக்க முடியாதவை...
முதல் முதலா மேடைல பேசின அனுபவம்தான் இது.


அப்ப 6வது படிச்சிட்டு இருந்தேன். அது வரைக்கும் பேச்சு போட்டில எல்லாம் சேந்ததே கிடையாது. புது பள்ளிகூடம் வேற.ஸ்கூலுக்கு போகும்போதே அம்மாவோட அறிவுரை..பாருமா நல்ல படிச்சா மட்டும் போதாது எல்லா போட்டியிலும் சேரணும் நிறைய பரிசு வாங்க்கணும்னு. அதுக்கு ஏத்த மாதிரி பல பள்ளி மாணவர்களும் கலந்துக்கர ஒரு பேச்சு போட்டில முதல் ஆளா பேர குடுத்துட்டேன். போட்டி வர்ற சண்டே அதுவும் பத்மா சேஷாத்ரிலன்னு சொன்னாங்க.தலைப்பு - என்னை கவர்ந்த குறள்.
வீட்டுக்கு போனதும் அம்மா,அப்பா,பாட்டி,தாத்தா..எல்லார் கிட்டயும் இத பத்தி பெருமையா சொல்லிட்டேன்.
சரி இப்ப எனக்கு யாரு எழுதி தரப்போறிங்க..
உனக்கு பிடிச்ச குறள்னுதானே தலைப்பு..அப்ப நீதானெ எழுதணும் என்று இந்த ஒரு விஷயத்தில் குடும்பமே ஒத்துமையாய் இருக்க வேறு வழியில்லாமல் தமிழ் ஆசிரியை அன்றைய வகுப்பில் எடுத்த அன்புடைமையில் எனக்கு பிடித்த ஒரு குறளை பற்றி எழுதி படித்தும் விட்டேன். பின்னர் தினமும் கண்ணாடி முன் நின்று பேசிப்பாத்து ஒரே கொண்டாட்டம்தான்.
கடைசியில் அந்த பொன்நாளும் வந்தது.


நான் என்ன சொல்லியும் கேக்காமல் முதல் தடவ மேடையில பேச போற அதனால பட்டு பாவாடை சட்டைதான் போடணும்னு சொல்லி...கிட்டதட்ட ஒரு நடனப் போட்டி போற மாதிரி தயாரானேன்.
அப்பா நீங்க என்னை பள்ளியில விட்டுட்டு போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சி திரும்பி வந்து கூட்டிட்டு போங்க என்றேன்.
போடி முதல் தடவ மேடைல பேச போற நான் அப்பா ரெண்டு பேரும் வந்து நீ பேசி முடிக்கரவரைக்கும் இருந்து உன்னை கூட்டிட்டு போறோம்..இது அம்மா

என்ன அப்படி சொல்லிட்ட என் பேத்தி பேச போறா நா இல்லாமலா என்று பட்டு புடைவையில் என் பாட்டி..நல்ல வேளை தாத்த பட்டு வேட்டி எல்லாம் போடாமல் கதர் அணிந்திருந்தார்...ஆக பேச்சு போட்டிக்கு குடும்பத்தோட போன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்.

போனவுடன் அனைவரையும் ஒரு வகுப்பில் அமரச் சொன்னார்கள். என்னை தவிர எல்லோரும் பள்ளி சீருடையில் இருந்தார்கள்.அம்மாவை நன்றாக முறைத்தேன்.

நடுவராக மூவர் வந்து அமர்ந்தார்கள். இத பாரு நீ முதல் பென்ச்சுல போயி உக்காரு. எல்லார் பேசரதயும் நல்லா கவனி. என்று அம்மா சொன்னவுடன் முதல் பென்ச்சில் போய் உட்கார்ந்தேன். அதுவரை இல்லாத பயம் திடிரென்று தொற்றிக் கொண்டது. எல்லோர் பேசுவதையும் கேட்டு அது இன்னும் அதிகமாகிவிட்டது. எங்கள் பள்ளி பெயரை அறிவித்கார்கள். எங்கள் பள்ளியில் இருந்து நானும் இன்னுமொரு மாணவியும் வந்திருந்தோம்.முதலில் அந்த மாணவி சென்று அடக்கமுடைமை பற்றி பேச எனக்குள் பயம் அடங்காமல் ஆடியது. கடைசியில் என் பெயரையும் அறிவித்துவிட்டார்கள்.

குறளில் என்னை கவர்ந்த குறள் எது என்பதை என் குரலில் கூறவே இங்கு வந்தேன் என தெம்பாய் ஆரம்பித்து தெரியாமல் என் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து விட்டேன்..அவ்வளவுதான் அதன் பின் ஒரு வார்த்தை கூட நினைவுக்கு வரவில்லை..அன்புடைமை பற்றி மறந்துவிட்டு என்னை கவர்ந்தது அடக்கமுடைமை என்று உளர...என் அம்மாவின் முகத்தில் கலவரம். அதன் பின்னர் ஒரு 2 நிமிடத்துக்கு அதாவது அதாவது என்று பேந்த பேந்த முழித்து பின்னர் அங்கேயே அழுது விட்டு மேடையில் இருந்து கீழெ இறங்கினேன்..

பரவாயில்லைம்மா அழாதே என்று நடுவர்கள் ஆறுதல் கூற...என் பட்டு பாவாடை வேறு..அது எல்லொருக்கும் என்னை நன்றாக அடையாளம் காட்டி விட்டது...
அப்புறம் என்ன..இதுக்கு மேல இனிமே அவமானப்பட முடியாது என்று தெரிந்ததால் அதன் பின்னர் அனைத்து பேச்சு போட்டியிலும் துளி கூட பயமே இல்லாமல் கலந்து கொண்டது வேறு கதை...!!! ஆனால் இந்த முதல் அனுபவம் மட்டும் என் பயத்தை போக்கியது உண்மை.

17 மறுமொழிகள்:

Blogger ரவி said...

கொஞ்சம் கேப் விட்டு எழுதுங்க...மேடையில பேசினமாதிரி கேப்பில்லாம வேண்டாம் :))))

9:17 PM  

Blogger Unknown said...

என்னங்க கருப்பு கலர் டெம்ப்ளெட் பழசு பளிச்சின்னு இருந்துச்சே :)

10:16 PM  

Blogger Anu said...

I havent changed the template DEV

10:21 PM  

Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா இருக்குங்க உங்க நினைவு சின்ன வயசில முந்திரிக் கொட்டை மாதிரி துரு துருன்னு இருந்திருப்பீங்கன்னு நினைக்கறேன். அது மாதிரி இருக்கறவங்க தான் இப்படி எல்லாம் பேர் கொடுப்பாங்க

:-)))

நானெல்லாம் நேர் எதிர் போட்டின்னாலே தூர ஓடிப் போயிடுவேன்.

10:36 PM  

Blogger சத்தியா said...

ம்... நல்லதோர் நினைவு மீட்டல்.

5:14 AM  

Blogger Raghavan alias Saravanan M said...

நல்லாருக்குங்க... இந்தப் பதிவு.. நீங்க மட்டுமில்ல.. நெறயப் பேருக்கு இந்த அனுபவம் இருக்கும்..

நானும் நிறையப் போட்டிகளில் கலந்துக்கிட்டுப் பரிசும் வாங்கிருக்கேன்.. ஆனா மேடைப் பயம் இல்லவே இல்லீங்க..

ஆனா பள்ளிப் படிப்பு முடிஞ்சதும், கல்லூரி (தொழிற்கல்லூரி (டிப்ளமா))யில இடைவெளி விட்டேன் பாருங்க.. திடீருன்னு சந்தேகம் வந்துருச்சு.. எங்கேடா போச்சு எல்லாமுன்னு!!

இடைவெளி விட்டா இப்டித்தானுங்களோ....

5:04 AM  

Anonymous Anonymous said...

hahaha seri commedya irunduchu. infact, nee pannadhellam , ippo nerla patha madhiri iruku.
When i was doing my 5th standard, i too participated in singing, Thirukural saying... but yedulayum prize kedaikala. Aduku appuram, yenda potilayum kalandukalai.

your fr.

8:39 AM  

Blogger ராம்குமார் அமுதன் said...

என் வாழ்க்கைலயும் இதே மாதிரிதாங்க...... நானும் 6ஆம் வகுப்புல முதல் தடவயா பேசேல, 5 நிமிஷப் போட்டி முடியரதுக்குள்ள 5 டிகிரி காய்ச்சல் ஏறுச்சு..... அப்புறம் பழகிப்பழகி கிட்டத்தட்ட நூறு மேடைகளுக்கு மேல பேசியாச்சு.... கல்லூரி கடைசி வருஷம் படிக்கேல சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம் பேசுனத வாழ்நாள்ல எப்பவுமே மறக்க முடியாது.....

5:33 AM  

Blogger கார்த்திக் பிரபு said...

namakkum idhe mari niraya anubavam iruku..padinga

10:40 PM  

Blogger Chandravathanaa said...

உங்களுக்கு முதல் முதல்தான் மேடைப்பயம் வந்தது. எனக்கு இடையிலே வந்தது.(பத்து வயதில்)
அதன் பின் நான் மேடையேறுவதே இல்லை. (அதாவது பேசுவதற்கு ஏறுவதில்லை. நடனங்கள் செய்திருக்கிறேன். அது பிரச்சனையில்லை. கதைப்பதுதான் முடியாது.) எத்தனையோ வருடங்களின் பின் ஜேர்மனியில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ஒரு விவாத அரங்கில் கலந்து கொண்டேன். மாட்டேன் மாட்டேன் என்று நின்ற போது எனது கணவர்தான் எழுத முடிந்த உன்னால் ஏன் கதைக்க முடியாது என்று சொல்லிக் கலந்து கொள்ள வைத்தார். எதிர் பார்த்ததை விடத் துணிவாகக் கதைத்தேன்தான்.

ஆனால் மீண்டும் அவுஸ்திரேலியாவில் ஒரு விமர்சன அரங்கில் அழகாக எல்லாம் எழுதி வைத்து விட்டு மேடையில் அவசரமாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொட்டி விட்டு ஓடி வந்து இருந்து விட்டேன்.

11:17 PM  

Blogger elamthenral said...

medaiyila pesuneengala ?? enkitta sollave illa.....

pushpa

2:19 AM  

Blogger elamthenral said...

unga blog super akka....
pushpa

2:21 AM  

Anonymous Anonymous said...

unga blog super.........

pushpa

2:23 AM  

Blogger சிங். செயகுமார். said...

hi anitha
if u dont mind plz forward ur mail id for next singapore upcomming events invitation.
k thankz
singh.jayakumar

7:51 PM  

Blogger மங்களூர் சிவா said...

ஜூப்பரு!!

9:00 PM  

Anonymous Anonymous said...

KONJAM MAVADHU UPDATE PANNUNGA....

8:39 PM  

Blogger தேவன் மாயம் said...

முதல் அனுபவம் பயம்
எல்லொருக்கும் உண்டு.
என்னைப்பொருத்தவரை
சிறுவயதில் குறள் ஒப்பித்தலில்
தொடர் பரிசு.
+2 ல் மனப்பாடம் செய்யாமல்
ஓன் ஆக படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
தமிழில் மதிப்பெண் அதிகம் என்பதால்
வாத்தியார் பட்டிமன்றத்தில்
ஏத்திவிட்டார். ஏறியவுடன் பாருங்க
ஒரு வரிகூட ஞாபகம் வல்லை.
வேர்த்து ஊத்திவிட்டது.
அதிலிருந்து மேடை ஏற்ற்தை
உட்டுட்டேன்.

2:41 AM  

Post a Comment

<< முகப்பு