முதுமை
பாசம், நன்றி மறந்து போன சில வார்த்தைக்கு
அவசர தேவை ஒரு பெயர் சூட்டு விழா !!!!
சமீபத்தில் இந்தியா சென்ற போது முதியோர் இல்லம் செல்ல நேர்ந்தது. அங்கு இருந்த ஒவ்வொரு நிமிடமும் மனதில் எதோ ஒரு இனம் தெரியாத வலி. இன்றைய அவசர உலகில் எவருக்கும் நேரமில்லை. தம் குழந்தைகளை கவனிக்கவே நேரமில்லாத போது எங்கே இருந்து வயதான பெற்றோர்களை கவனிக்க நேரம். ஆனால் அந்த இல்லத்தில் இருந்த ஒவ்வொருவர் கண்களிலும் ஒரு தேடல், தவிப்பு , ஒரு வலி, ஒரு ஏக்கம். இன்னும் பலர் ஏதோ இப்படி ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் தங்கள் பெற்றோர்களை சேர்த்து வைப்பதன் மூலம் ஏதோ சாதித்து விட்டது போல் நினைக்கிறார்கள். ஒரு நாள் நமக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படும் என்ற எண்ணம் ஏன் தோன்றுவதில்லை. ஒரு வயதானவர் தலையில் கட்டு போட்டு இருந்தது. ஆனால் அவர் முகத்தில் ஒரே சந்தோஷம். என்ன தாத்தா வலி இப்ப கம்மி ஆச்சா என்று கேட்டேன். வலியே இல்லம்மா. ஏதோ இந்த அடிபட்டதால் என் பசங்க என்ன வந்து பாத்தாங்க அந்த சந்தோஷம் போதும்மா என்றார். மனசு வலித்தது. இனி வரும் தலைமுறைக்கு பாசம், உறவுகள் இவை எல்லாம் சரித்திர பாடமாய் மட்டுமே இருக்குமோ?
11 மறுமொழிகள்:
ஏற்கனவே ஒரு பெயர் வைத்திருக்கிறார்களே... 'வீண்சுமை' என்று
வீட்டில் கேலிப்பொருளாவதை விட இது போன்ற இடங்கள் சாலச் சிறந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து
அப்படி நினைப்பது தப்பு என்பது என் கருத்து.
அனிதா...
வயதாக ஆக - வந்துவிடுகிறது குழந்தை மனது அவங்களுக்கு...
இந்த நாகரீக உலகில் - தலைமுறை இடைவெளியை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் - பிள்ளைகள் ஆதரவில் வாழ நேரிடும்போது - கஷ்டம்தான் போங்க..
பென்ஷன் வாங்கிக்கிட்டு தனியா நிம்மதியா இருப்பது பெஸ்ட்...
தனியா நிம்மதியா இருக்க முடியும்னு நெனைக்கரீங்களா
ஆண்டவந்தான் காப்பாத்தனும் இந்த நிலை நமக்கும் நாளை வராம. பிள்ளை வளர்ப்பு தப்பானதால் அவங்க பெற்றவர்களை கொண்டு சேர்க்கிறார்களோன்னு சில நேரம் தோனுது.
//ஏதோ இந்த அடிபட்டதால் என் பசங்க என்ன வந்து பாத்தாங்க அந்த சந்தோஷம் போதும்மா என்றார். மனசு வலித்தது//
நிஜமாகவே வலிக்கிறது..
இத்தனை வருஷம் பிள்ளைகளை கஷ்டபட்டு வளர்த்தவங்க, கடைசி காலத்தில நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படறதில எந்த தவறும் இல்ல.
சுயபுத்தி உள்ளவர்கள் யாரும் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில விடணும்னு நினைக்க மாட்டார்கள், எல்லாம் வாய்ப்பவனி(ளி)ன் கைகளில்தான் இருக்கு.
ஆடை அணியக் கற்றுக் கொடுத்த பெற்றவர்களை பேணாதவர்களை ஒரு துரும்பெனத் தான் நான் மதிப்பேன்.
பெற்றோர்களை பார்த்துக் கொள்வது கடமை என்று மட்டும் நினைக்காமல் நம் வாழ்க்கையின் ஒரு பாகம் என்று நினைத்தால், இவர்களின் கண்களில் இந்த ஏக்கப் பார்வை இருக்காது... சில நேரங்களில் தவறு இருவரிடத்திலும் இருந்தாலும், இன்றைய தலைமுறையினரிடம் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டு தான் இருக்கிறது...
தெய்வமே! கேட்கவே வேதனையாக இருக்கிறது.
அட அட! என்னங்க என் உறவுகள் பகைகளே கதைக்கும் இந்த பதிவுக்கும் செம லிங்க் இருக்கும் போல.
//அங்கு இருந்த ஒவ்வொரு நிமிடமும் மனதில் எதோ ஒரு இனம் தெரியாத வலி.// இதே வலியை பல மாதங்கள் அனுபவித்தேன். இன்று நினைக்கும் போது அதே வேதனை தான்.
Post a Comment
<< முகப்பு